சாதி ஆணவப்படுகொலை புரிவோர் வாழத் தகுதியில்லை - வைகோ.!
சாதி ரீதியிலான ஆணவப்படுகொலைகளை அரங்கேற்றுவோர் மண்ணில் வாழத்தகுதியற்றோர், அத்தகையோர்களுக்கு அதிக பட்ச தண்டனை வழங்கப் பட வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது,
"கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத் துள்ள சூடகொண்டப்பள்ளி ஊரைச் சேர்ந்த, மனம் ஒருமித்து காதல் திரு மணம் செய்து கொண்ட நந்தீஷ்-சுவாதி இருவரையும் கொடூரமாகக் கொலை செய்து கர்நாடகாவில் உள்ள ஆற்றில் வீசி எறிந்துள்ள கொடுமை பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
மனம் விரும்பி சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டு ஓசூரில் வசித்து வந்த நந்தீஷ்-சுவாதி இருவரையும், சுவாதியின் தந்தை மற்றும் உறவினர்கள் "குலதெய்வம் கோவிலுக்குப் போகலாம்," எனக் கூறி அழைத்துச் சென்றுள்ள னர்.
பின்னர் இவர்கள் இருவரையும் சித்திரவதை செய்து கொன்று கை, கால் களைக் கட்டி கர்நாடகாவில் உள்ள சிம்சா ஆற்றில் தூக்கிப் போட்டுள்ளனர். இருவரின் உடல்களையும், கர்நாடகக் காவல்துறையினர் சிவன சமுத்திரா நீர் வீழ்ச்சியில் கண்டெடுத்துள்ளனர்.
சாதி ஆணவப் படுகொலை செய்துள்ள குற்றவாளிகள் நாகரிக மனித சமூகத் தில் வாழவே தகுதி அற்றவர்கள். சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி, இக்கொடூரக் கொலை புரிந்தவர்கள் தப்பிவிடாமல், நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நாங்கள் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட காரணத்தினால் எங்களை கொல்ல சுவாதியின் குடும்பத்தார் முயல்கின்றனர் என கொலை செய்யப்பட்ட காதல் தம்பதியினர் காவல் துறையில் புகார் வழங்கியுள்ளனா்.