Breaking News

படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குச் செல்லாதீா்கள் - தூதுவர் எச்சரிக்கை

சமூக ஊடகங்கள் மூலமாகவும் ஆள்கடத்தல்காரர்களும் பரப்புகின்ற பொய் யான செய்திகளை நம்பி அவுஸ்திரேலியாவை நோக்கிய சட்டவிரோத கடற் பயணங்களை இலங்கையர்கள் மேற்கொள்ள வேண்டாமென இலங்கைக் கான அவுஸ்திரேலிய தூதுவர் தெரிவித்துள்ளாா்.

அவுஸ்திரேலிய தூதுவர் பிரைஸ் ஹட்செசன் அறிக்கையொன்றில் அவுஸ்திரேலிய எல்லைகள் சட்ட விரோத குடியேற்றவாசிகளிற்கு மூட ப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஆட் கடத்தல்காரர்களிடமிருந்து அவு ஸ்திரேலிய எல்லைகளை பாது காத்த- கடலில் மக்கள் நீரில் மூழ்கி மரணிப்பதை தடுத்த கடுமையான எல்லை பாதுகாப்பு கொள்கைகள் தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளதாகத் தெரிவித் துள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்குள் எந்த சட்டவிரோத குடியேற்ற முயற்சிகளும் நடை பெறுவதை தடுப்பதற்காக - சட்டவிரோத குடியேற்றவாசிகளின் படகுகளை கண்டு பிடிப்பதற்கான வலுவான திறனை அவுஸ்திரேலிய கொண்டுள்ளதாக தூதுவர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்குள் படகுகள் மூலம் சட்ட விரோதமாக நுழைவதற்கு நீங்கள் முயற்சி செய்தால் நீங்கள் கைது செய்யப்படுவீர்கள் என தூதுவர் தெரி வித்துள்ளார்.

கடந்த நான்கு வருட காலப்பகுதியில் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைந்த அனைத்து இலங்கை படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன அதிலிருந்தவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தூதுவர் தெரிவித்துள்ளார்.