Breaking News

போர்க்களமாக மாறிய பாராளுமன்றம் ! ஆசனத்தைவிட்டு வெளியேறிய சபாநாயகர் !!

பாராளுமன்றில் இன்று காலை சபை நடவடிக்கைகள் ஆரம்பமானபோது மஹிந்த ராஜபக்ஷ விசேட உரையொன்றை ஆற்றியுள்ளாா்.

அந்த உரையில் நேற்யை தினம் அவர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான வாக்களிப்பு சபாநாயக ரால் குரல் மூலமே மேற்கொள்ளப்பட் டுள்ளதாகவும் அதனால் அவ்வாறான ஒரு நாம்பிக்கையில்லாப் பிரேரணை யொன்றை பிரதமர் மீதும் அரசாங் கத்தின் மீதும் கொண்டு வருவதாக இருந்தால் அதனை வாக்களிப்பின் பெயர் குறிப்பிட்டு மேற்கொள்ள வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.

அதனைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிடும் போது, பாராளுமன்றின் சபை நடவடிக்கையின் போது மஹிந்த ராஜபக்ஷ நடாத்திய விஷேட உரையின் பின்னர் லக்ஷ்மன் கிரி யெல்ல மஹிந்தவின் உரையில் கூறப்பட்ட விடயங்கள் உண்மையல்ல எனக் கூறி இன்றும் மீண்டுமொரு வாய்மூல நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை நடாத்த வேண்டுமென சபாநாயகரிடம் தெரிவித்துள்ளாா்.

இதனைத் தொடர்ந்தே சபையில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுந்திரக் கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள் சபாநாயகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சபாநாயகரின் ஆசனத்தை நோக்கி நகர்ந்தனர். அவ் வேளை சபாநாயகரை பாதுகாப்பதற்காக ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்தவர்களும் படைக்கல சேவியர்களும் அவ்விடத்தில் குவிந்துள்ளனா்.

இதன்போது இரு குழுவினருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்ந்தும் கைகலப்பாக மாறியது. இரத்தமேற்படும் வகையில் மோதல் நடைபெற்றுள் ளது.

பாராளுமன்றில் தற்போதும் பாராளுமன்றில் குழப்ப நிலையேற்பட்டதால் சபாநாயகர் தனது ஆசனத்தைவிட்டு வெளியேறியுள்ளாா்.