Breaking News

பாராளுமன்ற அடாவடியினால் பிரசன்ன ரணவீரவை கைது செய்யுமாறு எச்சரிக்கை.!

கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர கடந்த 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பொலிஸ் அதிகாரிகளை தாக்கி, மிளகாய் பொடி தூவி அவர்களின் சேவைக்கு இடையூறு ஏற்படுத்தியது மாத்திரமன்றி பொது சொத்துக்களை சீரழித்துள்ளாா்.

ஆகவே பிரசன்ன ரணவீர பொது சொத்து சட்ட மூலம் மற்றும் தண் டனை சட்டக்கோவைக்கு அமைவாக குற்றம் செய்தவராவார். இது தொடர் பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டுமென உள்ளுராட் சிமன்ற உறுப்பினர்கள் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கடந்த 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பிரசன்ன ரணவீரவின் நடவடிக் கைகளை உள்ளுராட்சிமன்ற மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் கண்டிப்ப தாகவும் பிரசன்ன ரணவீர தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிககப்பட வேண்டு மென புறக்கோட்டை மாநகரசபை உறுப்பினர் அஷ்வினி சந்துருவனி எச் சரிக்கை விடுத்துள்ளாா்.