"மைத்திரி, மஹிந்தவின் நடவடிக்கைகளே நெருக்கடிக்கு காரணம்"
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், மஹிந்த ராஜபக்ஷவும் அரசியமைப் பிற்கு எதிராகச் செயற்பட்டமையினாலேயே தற்போது நாடு மிக மோசமான அரசியல் நெருக்கடி நிலையினை எதிர்கொண்டுள்ளது எனத் தெரிவித்த சமூக நீதிக்கான நிலையம், சபாநாயகர் கருஜயசூரிய கட்சி பேதமின்றி, ஜனநாய கத்தை நிலைநிறுத்தும் நோக்கில் சரியான முறையிலேயே செயற்பட்டு வரு வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏற்பட்டுள்ள அரசியல் சிக் கல் நிலை தொடர்பில் கருத்து வெளியிடும் வகையில் ராஜகிரியவில் ஏற்பாடு செய் யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப் பில் சமூக நீதிக்கான நிலையம் மேற் கண்டவாறு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசி யலமைப்பு, ஜனநாயகம் என்பவற் றினை மாத்திரமன்றி நாட்டின் பாரம்பரியம், சம்பிரதாயங்கள் அனைத்தையும் சீர்குலைக்கும் வகையிலேயே செயற்பட்டு வருகின்றார்.
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டியவர் என்ற போதும், அவற்றைப் புறந்தள்ளி ஜனாதிபதி தன்னிச்சை யாக பாராளுமன்றத்தினை இயக்குவதை உடனடியாக நிறுத்தப்பட வேண்டு மெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.