முல்லைத்தீவு கரைதுறைப்பற்றில் வெள்ளத்தில் சிக்குண்டு உயிருக்கு போராடும் மக்கள்.!
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிலுள்ள நித்தகை குளம் உடைப்பெடுத்தமையால் அப்பகுதி அனர்த்தத்தில் சிக்கியுள்ளது. அதில் சிலரை மீட்க முடியாத இக்கட்டான சூழலிலும் அனர்த்த முகாமைத்துவ பிரி வினருக்கு தகவல் வழங்கியும் கண்டுகொள்ளாமல் செயல்படுகின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் விவரிக்கையில்...
1983ஆம் ஆண்டு குளத்தின் கட்டுமான பணியானது நடைபெற்றிருந்த வேளை நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக இடை நிறுத் தப்பட்டிருந்த வேளை குளத்தின் அணைக்கட்டு பாரிய உடைப்பு ஏற் பட்டு அன்றிலிருந்து 2018ஆம் ஆண்டு வரை குளம் நீர் இன்றி காணப்பட்டது.
மேற்படி கால வேளையில் அதன் கீழான வேளாண்மையும் பாதிப்படைந்தி ருந்தது. 2018 ஆம் ஆண்டு வடமாகாண சபை நிதி ஒதுக்கீட்டின் கீழ் 15 மில் லியன் ரூபா செலவில் புனரமைப்பு செய்யப்பட்டிருந்தது.
இக்குளம் 7 .11. 2018 அதிகாலை 12 .10 மணியளவில் உடைபெடுக்கும் போது நீரின் கொள்ளளவு 15 அடியாக காணப்பட்டது. இந்நிலையில் அப்பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மக்கள் வெள்ளத்தில் சிக்கி இருந்தனர்.
இவர்களை தேடிச் சென்ற உறவினர்கள் வெள்ளத்தின் மத்தியில் பகல் 11 மணியளவில் குளம் பெருக்கெடுத்த நிலையை அவதானித்த பின்னர் மீட்கக் கூடிய உறவுகளை கடும் போராட்டத்தின் மத்தியில் மீட்டெடுத்துள்ளனா்.
இருந்தும் அங்கிருந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவன், மனைவி, அவர்களது 12 வயது மகன் ஆகியோருடன் உறவுகளான மூவர் உட்பட ஆறு நபர்களை மீட்க முடியாத நிலையில் பிற்பகல் 2 மணியளவில் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளரான லிங்கேஸ்குமார் என்பவ ருக்கு தகவல் வழங்க தனக்கு ஏற்கெனவே தகவல் கிடைத்துள்ளதாகவும் நட வடிக்கை எடுப்பதாகவும் கூறியிருந்தார்.
ஆனால் இரவு ஏழு முப்பது மணிக்கு பின்னரே குமுழமுனை பகுதிக்கு உரிய பணிப்பாளர் கொண்ட குழாமால் வருகை தர முடிந்தது. பகல் வேளையி லேயே பயணிக்க முடியாத காட்டாற்று வெள்ளத்துடன் உடைப்பெடுத்த குள நீரும் சேர்ந்து ஓடும் வேளையில் இரவில் எவ்வாறு மீட்பு பணியை மேற் கொள்வது.
பகல்வேளையில் நிலவரத்தை பார்வையிட்டு முடிவெடுக்க வேண்டிய அதி காரி அவரது அசமந்தப் போக்கினால் சிக்கியிருக்கும் ஆறு உயிர்களை பொருட்டாக மதிக்காது இரவில் வருகை தந்து இராணுவத்தினரிடமும், கடற் படையிடமும், விமானப்படையினரிடமும், பொலிஸாரிடமும் உதவி கோரிய போது உதவி செய்ய மறுத்துள்ளனா்.
இப்போது மீட்பு பணியை மேற்கொள்ள முடியாதெனவும் பொறுப்பற்ற வகை யில் கூறி தனக்கு தகவல் கிடைக்கவில்லை எனவும் மேற்படி பொறுப்புக் கூறும் நடவடிக்கையிலிருந்து நழுவ முற்பட்டுள்ளாா்.
அதன் பின்னர் வருகை தந்த இராணுவத்தினர் 10 மீற்றர் தூரம் வரை முன்னேறி திரும்பிச் சென்று விட்டனர். அதன்பின் மக்களால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு தகவல் வழங்கியதன் பெயரில் இணைப்பு அழைப்பின் (Conference call) மூலம் முப் படையினரிடமும், அனர்த்த முகாமைத் துவ மத்திய நிலையத்தினருடனும் அழைப்பை ஏற்படுத்தி பேசியதன் பின் அனர்த்தத்தில் சிக்குண்டவர்களுடனும் பேசினர்.
பின் இரவு வேளையாகையாலும், காலநிலை சீரின்மையாலும் நாளை அதி காலையிலே விமானப் படையினர் மீட்பு பணியை மேற்கொள்வதாக தெரி வித்திருந்ததாக தெரிவித்துள்ளாா்.
அனர்த்த முகாமைத்துவம் என்பது ஏற்கெனவே திட்டமிட்டு நடைமுறைப்ப டுத்தும் ஒரு திட்டமாகும். வெள்ளமோ, சுனாமியோ ஓர் அனர்த்தம் ஏற்பட்ட பின்னர் மீட்பு பணியாளர்களை தேடுவது அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணியல்ல.
முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவ பிரிவு பணிப்பாளருக்கு போதிய பயிற்சியோ, அறிவுறுத்தல்களோ இல்லாது பணி பொறுப்பினை வழங்கியமை யால் அனர்த்தத்திற்குள்ளான மக்கள் உயிரிழக்கும் தறுவாயில் உள்ளனர்.
மேற்படி விடயத்தை அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மத்திய நிலையமும் சம்பந்தப்பட்ட அமைச்சும் கருத்திலெடுத்து எதிர்வரும் காலத்திலாவது உயிர் களுடன் விளையாடாது ஆக்கபூர்வமான பணியை செய்ய வேண்டுமென்பது மக்களின் வேண்டுகோள்.