Breaking News

மைத்திரி மீது குற்றச்சாட்டு - பாட்டாளி சம்பிக்க ரணவக்க.!

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 26ஆம் திகதி 45 நிமிடங்களுக்குள் நாட்டின் பிரதமரான ரணில் விக்ரமசிங்கவை நீக்கி விட்டு மஹிந்த ராஜ பக்ஷவை பிரதமராக நியமித்தமை ஒரு அரசியல் சதித்திட்டமாகும்.” என பாட் டாளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளாா்.

ஜனநாயகத்தை வென்றெடுப்பதற் கான நீதிக் குரல் என்ற போராட்டம் ஐக்கிய தேசிய கட்சியின் ஏற்பாட்டில் இன்று கண்டி நகரில் நடைபெற்றுள் ளது.

இதில் கலந்து கொண்டே ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப் பினர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதுடன் பாட்டாளி சம்பிக்க ரணவக்க, “மைத்திரிபால சிறிசேன எமது வாக்கை பெற்றுக் கொண்டு ஜனாதிபதியாகி எதிர்வரும் ஜனவரி மாதம் 9ஆம் திகதியோடு 4 வருடங்கள் பூர்த்தியாகவுள் ளது.

பதவி வேண்டாம் என்ற கூறிய மைத்திரிக்கு பதவி ஆசை வந்துவிட்டது. மைத்திரிக்கு நன்றாக தெரியும் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் எமது ஆதரவு கிடைக்காது என்பதை அறிந்தே “மொட்டே சரணம் கச்சாமி” என சரணடைந்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும் ஜனாதிபதியாக நினைத்தே மஹிந்த வோடு இனைந்து இச் சதி நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.

ஜனாதிபதி பதவிக்கு கோத்தாவும் பஷிலும் போட்டி போட்டுக் கொள்கிறார்கள். ஆனால் மஹிந்த மகன் நாமலுக்கு 25 வயது வரும் வரைக்கும் காத்து கொண்டு இருக்கிறார்.

அது வரையில் கோத்தாவும் பஷிலும் ஆட்சிக்கு வந்து விட கூடாது என்ற கார ணத்தினாலேயே மஹிந்த ராஜபக்ஷ தற்காலிகமாக ஒருவரை பதவி ஆசனத் தில் அமர்த்தி வைக்க வேண்டிய தேவைப்பாடு எழுந்துள்ளது.

அதேபோல் காமினி சேனாரத்ன கோத்தபாய மற்றும் நாமலிற்கு எதிரான வழக்கு விசாரணைகளில் மூவரும் சிறைக்கு சென்று விட்டால் எதிர் வரும் தேர்தலில் குடும்ப ஆட்சியை நிறுவுவதற்கு போட்டியிட முடியாமல் போய் விடும் என மஹிந்த எண்ணினார்.

மஹிந்தவிற்கு கட்சியோ கட்சி கொள்கைகளோ அல்லது கட்சியின் பின்னால் வருபவர்கள் பற்றியோ கவலையில்லை ஆனால் குடும்பத்தில் உள்ளவர்க ளுக்கு ஏதாவது ஒன்றென்றால் மட்டும் இதயம் துடிக்கும்.

இன்று அவர்களது பக்கத்தில் கட்சியோ கூட்டமைப்போ இல்லை அங்கு முத லாவதாகவும் இரண்டாவதாகவும் மூன்றாவதாகவும் இருப்பது ராஜபக்ஷ என்ற பெயரே. அவர்களது அடிநாதம், நாமம் ராஜபக்ஷ ஆனால் எங்களது அடி நாதம் மக்களே ஆவர். இன்று அவர்கள் சபாநாயகரை தூற்றுகிறார்கள்.

ஆனால் சபாநாயகர் கரு ஜயசூரிய 26ஆம் திகதிய வர்த்தமானி அறிவித்தலின் படி மஹிந்தவை பிரதமராக ஏற்றார். அதற்கு நாங்கள் எங்களது எதிர்ப்பை சபாநாயகருக்கு தெரிவித்தோம் தெரிவித்து விட்டு வெறுமனே இருந்து விட வில்லை எங்களது பெரும்பான்மையை நிரூபித்து காட்டினோம். அந்த பெரும்பான்மை பலத்திற்கு மதிப்பளித்தே சபாநாயகர் செயற்பட்டுள்ளார்.” என தெரிவித்துள்ளாா்.