Breaking News

யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு நினைவு சின்னம் நிறுவ வேண்டுகை.!

கிளிநொச்சி டிப்போச் சந்தியில் அமைந்துள்ள பசுமை பூங்கா காணியில் யுத்தத்தில் உயிரிழந்த அனைவரது நினைவாக நினைவுச் சின்னம் ஒன்றை அமைக்க கரைச்சி பிரதேச சபை நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதேச சபையின் உறுப்பினர் தா.ரஜனிகாந் வேண்டுகை விடுத்துள்ளார்.

கிளிநொச்சி டிப்போச் சந்தியில் அமை ந்துள்ள பசுமை பூங்கா கரைச்சி பிர தேச சபையிடம் நகர அபிவிருத்தி அதிகார சபையினரால் ஒப்படைக்கப் பட்டுள்ளது. அதன் எதிர் பக்கத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோத்த பாய ராஜபக்ஷவி னால் நிறுவப்பட்டுள்ளது.

எனவே அங்கு வருகின்ற மக்களுக்கு ஒய்வெடுக்கவும், உல்லாசம் புரிவதற்கு மாக பசுமை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. எனவே பசுமை பூங்காவின் ஏ 9 வீதியின் பக்கம் வேலி அமைத்து வடக்கு பக்கமாக பாதை அமைப்பத்தால் அதனை தடுக்க முடியுமென தவிசாளர் அ. வேழமாலிகிதன் தெரிவித்துள்ளாா்.


இதன் போதே யுத்தத்தில் உயிரிழந்த அனைவருக்கும் குறித்த பசுமை பூங்கா பகுதியில் நினைவுச் சின்னம் ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் அங்கு வருகின்ற அனைவருக்கும் இங்கு நடந்த சம்பவங்கள் தெரியவருமென பிர தேச சபை உறுப்பினர் தா.ரஜனிகாந் கோரிக்கை விடுத்துள்ளார்.