Breaking News

மகிழ்ச்சியை 'செல்பி' யுடன் இணைந்த எம்.பி.க்கள்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெற்றதை அடுத்து சபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் செல்பி எடு த்து தமது மகிழ்ச்சியை சமூக தளங்களில் பதிவேற்றியுள்ளனா்.

அதன்படி ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களான விஜயகலா மகேஸ் வரன், தலதா அத்துகோரள, ஹரின் பெர்னாண்டோ, அஜித் பி பெரேரா, ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்டவர் கள் கூட்டாகச் செல்பி எடுத்துள்ளனா்.

மறுபுறம் டி.எம்.சுவாமிநாதன் தமிழ் தேசி யக் கூட்டமைப்பின் உறுப்பினர் சிவமோகனுடன் செல்பி எடுத்துக்கொண் டார். ஏனைய உறுப்பினர்களும் செல்பி எடுத்து தமது பதிவுகளை சமூக தளங்க ளில் பதிவேற்றியது சபையில் அவதா னிக்க முடிந்தது.