Breaking News

நிஷாந்த சில்வாவின் இடமாற்றம் இரத்து !

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா வுக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் இரத்துச்  செய்யப்பட்டுள்ளது.

குறித்த  இடமாற்றமானது நேற்றிலி ருந்து அமுலுக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நீர் கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிக்கே இடமாற்றம் வழங்கப்பட் டதாகவும் பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந் நிலையிலேயே அவருக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை இரத்து செய் துள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. நிஷாந்த சில்வா கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தி கொலை செய்யப்பட்ட விவகாரம், லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்ட விவகாரம், வஷீம் தாஜூடீன் படுகொலை, ஊட­க­வி­ய­லாளர் கீத் நொயார் விவகாரம் உட்பட பல சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்றவாறு உள்ளன.