Breaking News

ஐ.தே.முன்னணியினர் இன்று சபா­நா­ய­க­ருடன் சந்திப்பு

ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இன்று பாரா­ளு­மன்ற கட்­ட­டத்­தொ­கு­தியில் சபா­நா­யகர் கரு ­ஜ­ய­சூ­ரி­யவை சந்­தித்துக் கலந்­து­ரை­யா­ட­வுள்­ளனர்.

பாரா­ளு­மன்றம் அடுத்­த­ வாரம் கூடும்­போது பிர­தமர் மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கு உரிய ஆசனம் ஒதுக்­கப்­படுமென சபா­நா­யகர் உறு­தி­ய­ளித்­துள்ளார். இந்த நிலை­யி­லேயே ஐக்­கிய தேசிய முன்­னணி உறுப்­பி­னர்கள் அவரைச் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

முன்­ன­ணியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் தலை­மையில் நேற்று நடை­பெற்ற பாரா­ளு­மன்றக் குழுக்­கூட்­டத்­தி­லேயே இந்தத் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. இதே­வேளை சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரி­யவை ஐக்­கிய தேசிய முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும் கட்­சி­களின் தலை­வர்கள் நேற்­று­முன்­தி­ன­மி­ரவு சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ளனர்.

சபா­நா­ய­க­ரது இல்­லத்தில் இச் சந்­திப்பு நடை­பெற்­றுள்­ளது. இதன்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் தான் சந்­தித்து பேசி­யமை தொடர்­பிலும் ஜனா­தி­ப­தியின் கருத்து குறித்தும் கூட்­டணி தலை­வர்­க­ளிடம் சபா­நா­யகர் எடுத்துக் கூறி­யுள்ளார்.

இந்த நிலையில் பாரா­ளு­மன்­றத்தை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கூட்டும் விட­யத்தில் கால­தா­மதம் காண்­பிப்­பா­ரே­யானால் நீங்கள் பாரா­ளு­மன்­றத்தை கூட்ட வேண்டும்.

ஜன­நா­ய­கத்தை பேணும் வகை­யிலும் அர­சியல் அமைப்பை பாது­காக்கும் வகை­யிலும் இத்­த­கைய தீர்­மா­னத்தை சபா­நா­ய­க­ரான நீங்கள் எடுக்க வேண்டு மென முன்­ன­ணியின் அங்­கத்­துவ கட்சித் தலை­வர்கள் கோரிக்கை விடுத்­துள்­ளனர்.

இச் சந்­திப்பில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் சார்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் லக்ஷ்மன் கிரி­யெல்ல, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலைவர் ரிஷாத் பதி­யூதீன், தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலைவர் மனோ கணேசன் உட்­பட பலரும் கலந்­து­கொண்­டனர்.

ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் தலை­மையில் நேற்­று­முன்­தினம் மாலை அல­ரி­மா­ளி­கையில் முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற குழுக் கூட்டம் இடம்­பெற்­றது.

இத­னை­ய­டுத்து கூட்­ட­ணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலை­வர்­க­ளது கூட்­டமும் நடைபெற்றது. இக் கலந்துரையாடல்களில் பாராளுமன்றத்தில் பெரும் பான்மையை காண்பித்து மீண்டும் ஆட்சிப் பொறுப்பை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது.