Breaking News

அவுஸ்திரேலியாவை புரட்டிய புழுதிப் புயல்.!

அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதியில் நேற்று கடுமையான புழுதிப் புயல் வீசியுள்ளது.

சுமார் 500 கிலோ மீற்றர் பரப்பளவுக்கு வீசிய இப் புயலில் சிட்னி முதல் பல நகரங்கள் பாதிக்கப்பட்டதுடன், வான மும் செம்மஞ்சள் நிறமாக மாறிக் காணப்பட்டுள்ளது.

 கடந்த ஆகஸ்ட் மாதம் முதல், அந்த நாடு கடுமையான வறட்சியின் பிடி யில் சிக்கியுள்ள நிலையில், இப் புழு திப்புயல் வீசியதால் வீதிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் விமானப் போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ளன. 

குறித்த புயலில் சிக்குண்டோர் சுவாசிப்பதில் சிரமத்தினை எதிர்கொண்டதுடன் பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதுடன் உடனடியாக அதிகாரிகள், பொது மக்களுக்கு எச்சரிக்கையுடன் கூடிய வேண்டுகோள் விடுத்துள்ளனா். 

யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், குறிப்பாக குழந்தைகளை வெளியே விடாதீர்கள், சுவாசப் பிரச்சினை உடைய முதியவர்களையும் வெளியே அனுப்ப வேண்டாமென எச்சரிக்கை விடுத்துள்ளனா்.