நாட்டின் அமைதியை சீரழிப்பதாக சுமந்திரன் மீது குற்றச்சாட்டு - விமல் வீரவன்ச.! (காணொளி)
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க ஆகியோர் வெளிநாட்டு சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்பட்டு நாட்டின் அமைதியை சீர்குழைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவ தாக மஹிந்தவாதியான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளாா்.
நாட்டில் யுத்தம் தீவரமடைந்திருந்த போது, சிறிலங்கா மீது சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்த வெளிநாட்டு இராஜதந்திரிகளை, கடந்த சில நாட்களாக ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பதவியிழந்த அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சந்தித்து வரும் விடயமானது, நாட்டுக்கு எதிரான சூழ்ச்சியை மிகத் தெளிவாக அம் பலப்படுத்தியுள்ளதாக வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம், நாடாளுமன்ற அமர்வில் இருந்து வெளிநடப்பு செய்திருந்த ஆளும் மஹிந்த ராஜபக்சவுக்கு சார்பான உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் நடத்திய ஊடகச் சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
“ஸ்ரீலங்கா அரசியல் வரலாற்றில் எந்தவொரு சபாநாயகரும் நிறைவேற்று அதிகாரத்துடனும், பிரதமர் உட்பட அமைச்சரவையுடன் முட்டிமோதிய தில்லை. பிரதமரையும், புதிய அமைச்சரவையையும் ஜனாதிபதி தனது நிறை வேற்று அதிகாரத்தை பயன்படுத்தியே நியமித்துள்ளாா்.
அதனை சவாலுக்கு உட்படுத்த சபாநாயகரால் இயலாது. அதற்கு அவருக்கு உரிமையும் இல்லை. முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், சபாநாயகர் கரு ஜயசூரியவும், இந் நாட்டில் யுத்தம் ஒன்று நடைபெற்ற சந்தர்ப்பத்தில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட வெளிநாட்டு இராஜதந்திரிகளை தினம் தினம் சந்தித்து கொண்டிருக்கின்றார்கள்.
மஹிந்த ராஜபக்ச கடந்த 2015-ஆம் ஆண்டு ஜனவரி 9-ஆம் திகதி தேர்தலில் தோல்வியடைந்து கால்ட்ன் இல்லத்திற்கு சென்ற சமயத்தில் அவரை சந்திக்க வெளிநாட்டு பிரதிநிதிகள் வரவில்லை, பொது மக்களே வந்தனர். எனினும் ரணில் பதவியிழந்த சந்தர்ப்பத்தில் அவரை சந்திக்க பொதுமக்கள் வரவில்லை வெளிநாட்டு இராஜதந்திரிகளே சென்றிருந்தனர்.
இதன் பின்னணியில் மிகப்பெரிய சூழச்சி ஒன்று இருப்பது தெளிவாகின்றது. வெளிநாட்டு சக்திகளுக்கு தேவையான வகையில் இந்த நாட்டை அமைதி யற்ற நிலைக்குத் தள்ளுவதற்கு, ரணில், சுமந்திரன் மற்றும் அநுரகுமார ஆகி யோர் முற்பட்டுள்ளனா்.
இதன் பின்னணியிலேயே சபாநாயகரும் செயற்பட்டு வருகின்றார்”.
எவ்வாறாயினும் சிறிலங்கா நாடாளுமன்றில் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவ ரது அமைச்சரவைக்கு எதிராக இரண்டு தடவைகள் நம்பிக்கையில்லாத் தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும் அதனை ஏற்றுக்கொள்ள மஹிந்த ராஜ பக்சவும் ஆளும் கட்சியென கூறிக்கொள்ளும் அவரது தரப்பி னரும் மறுப்புத் தெரிவித்துள்ளனா்.
நவம்பர் 14-ஆம் திகதி மற்றும் நவம்பர் 16 ஆம் திகதி நாடாளுமன்றில் மஹிந்த வாதிகளால் கட்டவிழ்த்துவிடப்பட்ட மிக மோசமான குழப்பங்களுக்கு மத்தி யில் மஹிந்த மற்றும் அவரது அமைச்சரவைக்கு எதிராக மேலதிக வாக்கு களால் நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்றில் அறிவித்திருந்ததுடன், அதனை ஜனாதிபதிக் கும் எழுத்துமூலம் தெரியப்படுத்தியுள்ளாா்.
எனினும் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட விதத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென ஜனாதிபதி நிராகரித்து விட்டார்.
இந்த நிலையில் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் உட்பட சம்பிரா தாயத்தின் அடிப்படையில் முறையாக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று கொண்டுவரப்படுமாயின் அதற்கு முகங்கொடுக்க தாம் தயார் என மஹிந்த வா தியான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச புதிய கதையொன்றை முன்வைத்துள்ளாா்.
“அவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வருவார்களாயின் அதற்கு முகம்கொடுக்க, அந்த எமது பெரும்பான் மையை நிரூபிக்க நாம் தயார். எனினும் சபாநாயகர் சுயாதீனமாக செயற்பட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.