Breaking News

முதலில் பொதுத் தேர்தலா? ஜனாதிபதி தேர்தலா? இலங்கை அரசியலில் குழப்பம்.!

சிறிலங்காவில் ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு தீர்வு காணப் படாத நிலையில், பொதுத் தேர்தலை முதலில் நடத்துவதா அல்லது ஜனாதி பதித் தேர்தலை நடத்துவதா என்ற குழப்பமொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த குழப்பத்திற்கும் மஹிந்த – மைத்ரி அணியும் சிக்கியுள்ளமை நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ் வுகளில் அவர்கள் தெரிவித்த கருத் துக்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டி ருக்கின்றது.

சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான மைத்ரியின் விசுவாசியான எஸ்.பீ திஸாநாயக்க, கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி, நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவு பிறப்பித்து வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக இரத்துச் செய்ய வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதியின் உத்தரவு உச்ச நீதிமன்றில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் டிசெம்பர் ஏழாம் திகதி அந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான தீர்ப்பை அறிவிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரி வித்துள்ளது.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றின் தீர்ப்பு வெளியாவதற்கு முன்பு அந்த வர்த்த மானியை இரத்துச் செய்ய வேண்டுமென மஹிந்த - மைத்திரி அரசாங்கத்தின் அமைச்சராக அடையாளப்படுத்திக்கொள்ளும் சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

 நாடாளுமன்றில் தம்மால் பெரும்பான்மையை நிரூபித்து காண்பிக்க முடியும் என்றும் மீண்டும் சூளுரைத்துள்ள எஸ்.பி.திஸாநாயக்க மஹிந்த தலைமை யிலான அரசாங்கம் எந்தவிதத் தடையும் இன்றி தொடர்ந்தும் முன்னோக்கி நகருமெனத் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய மஹிந்த தலைமையிலான அரசாங்கம் உடனடியாக ஒத்தி வைக்கப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தல்களை உடனடியாக நடத் துவதற்கு தீர்மானித்துள்ளதுடன், அதனைத் தொடர்ந்து ஜனவரி மாதம் ஜனா திபதித் தேர்தலையும், ஏப்ரல் மாதமளவில் பொதுத் தேர்தலையும் நடத்த முடியுமென எஸ்.பீ மேலும் தெரிவித்துள்ளார்.

ஆனால் நாட்டின் பிரதமர் தானே என்று கூறிக்கொண்டிருக்கும் மஹிந்த ராஜ பக்ச, நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு பொதுத் தேர்தலை நடத்துவதன் ஊடாகவே நிரந்தரத் தீர்வைக் காண முடியுமென நேற்று நம் பிக்கை வெளியிட்டிருக்கின்றார்.

தென்பகுதி பிரதேசமான பெலியத்த பகுதியில் அமைந்துள்ள சிறி தேவ ரக்கித்தாராமய விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தூபியை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மஹிந்த இவ் வாறு தெரிவித்துள்ளாா்.

“நாம் அனைவரும் அரசியல் சாசனத்திற்கு மதிப்பளித்து செயற்பட வேண்டும். நீதிமன்றில் வழக்கொன்று விசாரணையில் இருக்கும் நிலையில் அந்த விவ காரம் தொடர்பில் நான் கதைக்கப்போவதில்லை.

ஆனால் நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை தீர்க்க இருக்கும் ஒரே தீர்வு மக்கள் முன் சென்று தீர்வைப் பெற இருக்கும் வழியான பொதுத் தேர்தலை நடத்து வதே என்று நாட்டிலுள்ள மக்களில் பெரும்பானவர்கள் கருதுகின்றனர்.

நாம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் மக்கள் மீது நம்பிக்கை கொண்டிருக்கின் றோம். வாக்களாளர்கள் நாட்டின் பிரச்சனைக்கு தீர்வை பெற்றுத் தருவார்கள். அதனால் அரசாங்கமும், எதிர்கட்சியும் தேர்தலுக்கு அஞ்சாமல் பொதுத் தேர்த லுக்கு முகம்கொடுக்க முன்வர வேண்டும்.

அதனால் எவரது உரிமையும் பறிக்கப்படாது. எவரும் அடிப்படை உரிமைக ளும் இல்லாது போய்விடாது. எல்லாவற்றையும் விட நாட்டில் விஸ்திரமான நிலைமையை ஏற்படுத்துவதே இன்றைய தேவையாகவுள்ளது.