Breaking News

மீண்டுமொரு நம்பிக்கையில்லா பிரேரணை தேவையில்லை - ரணில்.!

புதிய அரசாங்கத்தை என்னால் விரைவில் அமைக்க முடியுமென ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்துள்ளதால் மீண்டுமொரு நம்பிக்கையில்லா பிரேரணைக்கு அவசிய மில்லையெனத்  தெரிவித்துள்ளார். 

எங்களிடம் போதிய உறுப்பினர்கள் உள்ளனர் எங்களால் தொடர்ந்து செயற்பட முடியும் இதில் எந்த பிரச் சினையும் இல்லையெனவும் நாட் டிற்கு அரசியல் ஸ்திரதன்மை அவசி யமெனக் குறிப்பிட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க வலிமையான அரசாங் கத்தை அமைப்பதன் மூலம் அரசியல் ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதே எனது நோக்கமெனத் தெரிவித்துள்ளார்.

நாங்கள் அரசாங்கத்தை அமைப்போம் யூன்மாதத்திற்கு முன்னர் அனைத்து அரசியல் கட்சிகளின் இணக்கத்துடனும் தேர்தலை நடத்துவதற்கான பிரே ரணையை முன்வைப்போம் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நான் நீண்டகாலமாக பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளேன். பாரா ளுமன்றத்தின் மீது குண்டுவீசப்பட்டபோதும் நான் அங்கிருந்திருக்கின்றேன் எனினும் பாராளுமன்றம் இவ்வளவு மோசமான நிலைக்கு சென்றது இதுவே முதல் தடவையெனத் தெரிவித்துள்ளாா்.