தமிழர்களின் தேவையை ஜனாதிபதிக்கு ஞாபகப்படுத்துகிறேன் - சம்பந்தன்
முன்னாள் ஜனாதிபதியை நீக்கி புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறி சேனவை நியமிக்க தமிழர்களாகிய நாம் பெரும் பிரயத்தனம் முன்னெடுத் தோம்.
ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள அரசி யல் மாற்றத்தினால் தமிழர்கள் ஏமாற் றமடைந்துள்ளதாகவும், தமிழர்களு க்கு அரசியல் தீர்வு வழங்காத வரை யில் நாடு முன்னேற்றம் காண்பது கடி னமென எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளாா்.
நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற தேசிய தீபாவளிப் பண்டிகை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பொறுப்பேற்றப் பின்னர் மூன்று தேசிய தீபாவளி பண்டிகை நிகழ்வில் நான் கலந்துகொண்டிருக்கிறேன். ஒவ் வொரு முறைப் பேசும்போதும் அடுத்த தீபாவளிக்கு முன் நாட்டைப் பிரிக்காத, ஒரே நாட்டிற்கும் தமிழர்கள் சுதந்திரமாக இயங்கும் வகையிலான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென கோரிக்கை முன்வைத்தேன்.
அதேபோன்றதொரு நிகழ்வு நடக்கும் இந்நேரத்தில் நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நான் மீண் டும் தமிழர்களுக்கான தீர்வுக் குறித்த தேவையை ஞாபக்கடுத்துகிறேன் என் றார்.
செல்வநாயகம் தலைமையில் நாம் அஹிம்சை போராட்டத்தை முன்னெடுத் தோம். அதன் பின் ஆயுதமேந்திய போராட்டமாக மாறியது. அப்போதும் எமக்கு எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை. மீண்டும் நாம் ஒரு யுத்தத்தை விரும்ப வில்லை. யுத்தம் நிறைவடைந்து இத்தனை வருடங்களில் எமக்கான தீர்வு இன்னும் கிடைத்தபாடில்லை.
கடந்த காலத்தில் நிகழ்ந்த யுதத்தினால் நாடு பின்னோக்கிச் சென்றுள்ளது. நமது அண்டை நாடுகள் பாரிய வளர்ச்சி கண்டுள்ள நிலையில் நம் நாடோ வளர்ச்சிப் பாதைக்கு செல்வதாகத் தெரியவில்லை.
தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காத வரையில் நாடு முன்னேற்றம் போதாதெனத் தெரிவித்ததுடன் மீண்டும் ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுக் கின்றோம் எதிர் வரும் தீபாவளிக்கு முன் தமிழர்களுக்கான தீ்ர்வை காணவேண்டுமென எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளாா்.