மாவீரர்களை நினைவேந்த எழுச்சி கொண்டெழுந்த தமிழினம்!
தமிழீழ தேசிய மாவீரர் நாள் அனுட்டிப்பிற்காக தாயகம், தாய்த் தமிழகம் மற் றும் புலம்பெயர் தேசங்களெங்கும் பரந்து வாழும் உலகத் தமிழினம் எழுச்சிக் கோலம் பூண்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் திலிடுந்து ஈழ விடுதலைக்காக கள மாடி வீரமரணத்தைத் தழுவிய மாவீர ர்களை உணர்வுப் பெருக்குடன் நினை வில் ஏந்துவதற்காகவும் அவர்களது சாவின் மகத்துவம் போற்றுதற்காக வும் ஆண்டு தோறும் நவம்பர் இருபத் தேழாம் நாள் மாவீரர் நாள் அனுட்டிக்கப்பட்டு வருகிறது.
தேசிய மாவீரர் நாளிலே விடுதலைப் புலிகளின் போர்க்கள, அரசியல்துறை மற்றும் காவல்துறை உறுப்பினர்களும், எல்லைப்படை மற்றும் துணைப்படை உறுப்பினர்களும் ஈழ புரட்சிகர மாணவர் இயக்க உறுப்பினர்களும் குட்டிமணி, தங்கத்துரை போன்ற ஏனைய அமைபுக்களைச் சேர்ந்த மூத்த உறுப்பினர்களும் நினைவு கூரப்பட்டுள்ளது.
1989ஆம் ஆண்டு முதன்முதலாக மாவீரர் நாள் அனுட்டிப்பு விடுதலைப் புலி களால் கடைப்பிடிக்கப்பட்டது. அமைப்பிலிருந்து போராடி வீரச் சாவடைந்த முதல் மாவீரராகிய லெப்டினன்ட் சங்கர் அவர்களின் நினைவு நாளே தேசிய மாவீரர் நாளாக விடுதலைப் புலிகளால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அன்றிலிருந்து மாவீரர் நாளை அனுட்டிப்பது இயக்கத்தின் தலையாய கடமை களிலொன்றாகவும் கொள்கைகளிலொன்றாகவும் பேணப்பட்டது. உக்கிரமான யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற சமயத்திலும் போர்க்களத்தில் மாவீ ரர்களுக்கு ஈகைச் சுடரை ஏற்றி நினைவேந்தலை அனுட்டிப்பது விடுதலைப் புலிகள் தவறாமல் பேணிய ஒழுக்கமாகும்.
விடுதலைப் புலிகள் அமைப்பு தாயகத்தில் செயற்பாட்டு ரீதியில் இருந்தவரை மாவீரர் துயிலுமில்லங்களில் மாவீரர் நாள் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ் டிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் யுத்தத்தின் பின்னர் அனைத்து மாவீரர் துயி லும் இல்லங்களும் சிறிலங்கா இராணுவப் படைகளால் கைப்பற்றப்பட்டு சிதைக்கப்பட்டுள்ளன.
அண்மைய ஆண்டுகளில் சிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த பல மாவீரர் துயிலுமில்லங்கள் முழுமையாகவும் பகுதியளவிலும் விடுவிக்கப் பட்டுள்ளமையினால் பொதுமக்கள் குறித்த துயிலுமில்ல வளாகங்களை சிரமதானம் செய்து நினைவேந்தல்களை அனுட்டித்தவாறு உள்ளனா்.
இந்த நிலையிலேயே இந்த ஆண்டும் மாவீரர் துயிலுமில்லங்கள் சிரமதானப் படுத்தப்பட்டு மாவீரர் நாள் நினைவேந்தல் அனுட்டிப்பதற்கான ஒழுங்குகள் நடைபெற்றுள்ளன.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலுள்ள மாவீரர் நினைவேந்தல் தூபி மாண வர்களால் புதுப்பொலிவாக்கப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் அனுட்டிப்ப தற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மதியம் 12.30க்கு மாவீரர்களுக்கான மலர் வணக்கம் ஆரம்பமாகும் எனவும் மாலை ஆறு மணி ஐந்து நிமிடமளவில் மாவீரர்களுக்கான பிரதான ஈகைச்சுடர் ஏற்றப்படுமெனத் தெரிவிக்கப்பட் டுள்ளது.