மைத்ரியின் நடவடிக்கையை ஊகித்திருந்தேன் - ரணில் கருத்துக்களம்.!
இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கம் செய்து விட்ட தாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்து சுமார் பத்து நாட்களுக்கு மேலாகிவிட்டன. ஆனால், தன்னை பதவிநீக்கம் செய்ய பாராளுமன்றத்தால் மட்டுமே முடியும் என்கிறார் ரணில்.
மேலும், இப் பிரச்சனையை பாராளு மன்றத்தினை கூட்டுவதன் வாயிலா கவே தீர்க்க இயலுமென தெரிவித் துள்ள ரணில், தமக்கு எதிரான மைத்ரி யின் இந்த நடவடிக்கையை எதிர்பார் த்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி யுள்ள மஹிந்த ராஜபக்சேவை இலங்கையின் புதிய பிரதமராக மைத்ரி அறி வித்தது முதல் இலங்கை அரசியலில் ஏற்பட்ட குழப்பங்கள் இன்னமும் தீர்ந்த பாடில்லை.
பெரும்பான்மையை நிரூபிக்க பாராளுமன்றத்தினை கூட்டுங்கள் என்ற ரணி லின் கோரிக்கை இன்னமும் நீண்டுகொண்டிருக்க நிலையிலேயே, மைத்ரி தமக்கு எதிரான இம்மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபட கூடுமென தாம் ஊகித்திருந்ததாக நாளிதழ் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார் ரணில்.
மேலும், மைத்ரியின் இந்த நடவடிக்கை நவம்பர் மாத இரண்டாம் வாரத்தில் நடைபெறுமென தாம் கருதியிருந்ததாகவும் தெரிவித்துள்ள அவர் சபாநாயகர் கருஜெயசூர்யவையும், சஜித் பிரேமதாஸவையும் பிரதமராக்க மைத்ரி முய ற்சித்தமையை அவர்கள் தம்மிடத்தில் மறைமுகமாக தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இலங்கை அரசியல் யாப்புக்கு முரணான வகையில் பாராளு மன்ற உறுப்பினர்களுக்கு சலுகைகளை வழங்கி தங்கள் பக்கம் இழுக்கும் குதிரைபேர அரசியலில் மஹிந்த தரப்பு ஈடுபடுவதாக மாற்றுக்கட்சியை சார்ந்த ரணில் ஆதரவு எம்.பிகளில் ஒருவரான மனோ கணேசன் குற்றம் சுமத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.