ஈழத்தமிழர் விவகாரத்தில் துரோகம் இழைத்தது காங்கிரஸ் - திமுக கூட்டணி - அணி தாவும் வைகோ.!
கடந்த 2009 ஆம் ஆண்டு ஈழத்தில் நடைபெற்ற இறுதிக் கட்ட போரின் போது இலங்கை ராணுவத்திற்கு இந்தியா உள்ளிட்ட வல்லாதிக்க நாடுகள் பலவும் உதவி புரிந்தன, போர்த் தளவாடங்களை வழங்கின என்கிற தனது நீண்ட நாள் குற்றச்சாட்டில், நிலைப்பாட்டில் தற்போதும் எவ்வித மாற்றமும் இல்லை யென கடந்த சில நாட்களுக்கு முன்னாள் தமது கருத்தினை வெளிப்படுத்தி யுள்ளாா் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
தமிழக அரசியல் களத்தில் சரியான நேரத்தில் தவறான முடிவுகளை மேற் கொள்பவர் வைகோ என்ற பார்வை அரசியல் நோக்கர்களிடையே வெகு நாட் களாகவே உண்டு.
2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போரின் சமயத்திலும், அதற்கு பின் னான நாட்களிலும் காங்கிரஸ் - திமுக கூட்டணியை வெகுவாக விமர்சித்து வந்த வைகோ கடந்த 2014 மக்களை தேர்தல் சமயத்தில் பாஜகவை மூர்க்கமாக ஆதரித்துள்ளாா்.
மோடி பிரதமரானால் ஈழத்தமிழர் வாழ்வில் மலர்ச்சி ஏற்படுமென பிரச்சாரம் செய்த வைகோவின் செவியில் இடியாக வந்திறங்கியது மோடியின் பதவி யேற்பு விழாவில் அப்போதைய இலங்கை அதிபர் ராஜபக்சே கலந் துகொள் வார் என்ற அறிவிப்பு உடனடியாக அதனை எதிர்த்து போராட்டம் நடத்திய வைகோ அந்த கூட்டணியை முறித்துக்கொண்டார்.
அதற்கு பின்னான நாட்களில் மக்கள் நலக்கூட்டணியை கட்டி திமுகவை மண்ணை கவ்வச் செய்த வைகோ, தற்போது பாஜகவை வீழ்த்த திமுக - காங் கிரஸ் கூட்டணியை நிபந்தனைகள் ஏதுமின்றி ஆதரிக்க தயார் என தெரிவித்து செயற்பட்டுள்ளாா்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கடந்த 2009 ஆம் ஆண்டு ஈழத்தில் நடைபெற்ற இறுதி கட்ட போரின் போது இலங்கை ராணுவத்திற்கு இந்தியா உள்ளிட்ட வல்லாதிக்க நாடுகள் பலவும் உதவி புரிந்தன, போர்த் தளவாடங்களை வழங்கின என்கிற தனது நீண்ட நாள் குற்றச்சாட்டில், நிலைப் பாட்டில் தற்போதும் எவ்வித மாற்றமும் இல்லையென தெரிவித்து திமுக கூட்டணியை சலசலக்கச் செய்துள்ளார்.
மேலும், கஜா புயல் நிவாரண பணிகளை முன்னிறுத்தி அதிமுக அரசை அனைவரும் விமர்சித்துக்கொண்டிருக்க சிறப்பான முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்வதாக அதிமுக அரசை உச்சி முகர்ந்திருக்கிறார் வைகோ.
இது வைகோவின் அணி மாறும் எண்ணத்தையே வெளிப்படுத்துவதாக தெரிவிக்கின்றனர் அரசியல் நோக்கர்கள். தமிழகம் முழுவதுமாய் பாஜக, அதி முக அரசுகளுக்கு எதிரான அலை வீசிக்கொண்டிருக்க அதற்கெதிராய் தனது மதிமுக எனும் படகை செலுத்த துணிந்து விட்டாரா வைகோ?