Breaking News

"சுயாதீனமாக செயற்படாது விடின் சபாநாயகர் பதவி விலக வேண்டும்"

சபா­நா­யகர் பாரா­ளு­மன்ற சம்­பி­ர­தாயம் மற்றும் நிலையியற் கட்­ட­ளையின் பிர­காரம் பாரா­ளு­மன்­றத்தை வழி­ந­டத்­திச்­ செல்­ல­வேண்டும். முடி­யா­விட்டால் பதவி விலகி சுயா­தீ­ன­மாக செயற்­ப­டக்­கூ­டிய ஒரு­வரை நிய­மித்­துக்­கொள்ள இட­ம­ளிக்­க­ வேண்டுமென பிரதி அமைச்சர் வீர­கு­மார திஸா­நா­யக்க தெரி­வித்துள்ளாா்.

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி தலை­மை­ய­கத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்துள்ளாா்.

பாரா­ளு­மன்­றத்தில் இருக்கும் 225 உறு ப்­பி­னர்­களின் உரி­மை­களை பாது­காப்­பதே சபா­நா­ய­கரின் கட­மை­யாகும். ஆனால் கரு ஜய­சூ­ரிய ஐக்­கிய தேசிய கட்­சியை பாது­காக்கும் வகை­யிலே செயற்­படுவதாகத் தெரிவித்துள்ளாா்.

பாரா­ளு­மன்­றத்தில் கடந்த 3 தினங்கள் பிரச்­சினை ஏற்­பட கார­ண­மாக இருந்­ததும் சபா­நா­ய­கரின் நட­வ­டிக்­கை­யாகும். அவர் பாரா­ளு­மன்ற நிகழ்ச்சி நிரலின் பிர­காரம் சுயா­தீ­ன­மாக செயற்­பட்­டி­ருந்தால் இப் பிரச்­சினை ஏற்­பட்­டி­ருக்­கா தெனத் தெரிவித்துள்ளாா்.