அரசியல் நெருக்கடிக்கு தீர்வு என்ன ?....அரசாங்கம் நிழலா? அல்லது நிஜமா?
இலங்கைத்தீவின் அரசியல் நெருக்கடிக்குரிய தீர்வு என்ன? எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி பாணியில் 3வது வாரத்தில் எதிரொலிக்கும் வினா இது. இன்னமும் 6 நாட்களானால் இவ் வினாவின் எதிரொலிப்பு ஒரு மாதத்தையும் தாண்டப்போகிறது.
ஆனால் இந்த வினாவுக்கு சிறிலங்கா ஜனநாயக சோசலிசக்குடியரசின் முதற் குடிமகனான மைத்திரியிடமி ருந்து இதுவரை விடையில்லை. சாமானியாருக்கும் இதற்கு விடை தெரியவில்லை.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் தலைப்புக்குரிய பாணியில் மஹிந்த அரசாங்கம் நிழலா? அல்லது நிஜமா? என்பதை ஒருபுறமாகவும் அதேபோல ரணிலின் பழைய அரசாங்கம் தான் இப்போதும் நிஜமா அல்லது நிழலா என் பதை மறுபுறமாக கூறினாலும் கூட இரண்டிலும் இழுபறி உள்ளது.
இந்த இழுபறிகளுக்கு இடையே மேலும் சர்ச்சைகளை ஏற்படுத்தக்கூடிய வகையிலான சில நகர்வுகளுக்கு சடுதி வேகத்தடைகள் போடப்படுவதையும் அவதானிக்க முடிகிறது. அந்தவகையில் சிறிலங்கா குற்றப்புலனாய்வு பிரி வின் உயரதிகாரிகளில் ஒருவரான நிஷாந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட சடுதி இடமாற்றம் தற்போது சடுதியாக மீளெடுக்கப்பட்டுள்ளது.
மகிந்த அதிகாரமையக்காலத்தில் நடைபெற்ற ஊடகர் லசந்த விக்கிரமதுங்க, ரக்பி வீரர் வாஷீம் தாஜூதீன் ஆகியோரின் படுகொலைகள். சிறிலங்கா கடற் படையினரால் 11 தமிழ் இளைஞர்கள் கடத்திச்செல்லப்பட்டு காணாமல் ஆக் கப்பட்ட சம்பவம் உட்பட்ட சில வெள்ளைவான் நாசகாரங்கள் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை,
சிறிலங்கா முப்படைகளின் பிரதானி ரவீந்திர குணவர்த்தன மீதான குற்றச் சாட்டு என இருக்கும் நாசகாரங்களில் சில முக்கிய ஆதாரங்களை திரட்டுவதி லும் விசாரணைகளை நடத்தியதிலும் சுறுசுறுப்பாகச் செயற்பட்டவர் நிஷாந்த சில்வா என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் கடந்தமாதம் 26 ஆம் திகதியன்று பின்வாசல் வழியாக பிர தமர் ஆசனத்துக்கு மகிந்த நுழைந்த பின்னர் எதிர்பார்க்கப்பட்ட நகர்வுகளில் ஒன்றாக கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நிஷாந்தசில்வா நீர்கொழும்பில் உள்ள சாதாரண காவற்துறைப்பிரிவுக்கு இடமாற்றப்பட்டுள்ளாா்.
இந்த இடமாற்றம் ஏன்? எதற்கு என்ற வினாக்கள் இருந்தால் அதற்குரிய விடை களையும் நீங்கள் அறியக்கூடும். நிஷாந்தசில்வாவின் இந்த சடுதி இடமாற்றம் சடுதிஅதிர்வுகளை ஏற்படுத்தியது.
ஊடகங்கள் எதிர்வினையாற்றினர். ஊடகர் லசந்த விக்கிரமதுங்கவின் பதல்வி கூட மைத்திரிக்கு ஒரு அவசர கடிதத்தை எழுதினார். அவ்வாறு அதிர்வுகள் உருவாக இப்போது அந்த இடமாற்றம் சடுதியா மீள்எடுக்கப்பட்டதாக இன்று செய்தி வந்தது. இந்த மீள் எடுக்குப்புக்குரிய காரணமாக 19 ஆம் திருத்தத்தின் ஊடாக உருவாக்கபட்ட சுயாதீன ஆணைக்குழுக்களை சுட்டிக்காட்டலாம்.
அவ்வாறாக உருவான சுயாதீன காவற்துறை ஆணைக்குழுவே இந்த சடுதி இடமாற்றத்தில் தலையிட்டு அதனை நிறுத்தியிருப்பதை இங்கு அவதானிக்க லாம் ஆனால் இடமாற்றம் மீள் எடுக்கப்பட்டது என்பதைவிட நிசாந்த சில்வாவை முன்னரைப்போல தனது பணியை தொடர்வது அனுமதிப்பது தான் இங்கு முக்கியம்.
அவ்வாறு இடம்பெறுமா என்பதில் இங்கு ஐயம் இருக்கத்தான் செய்கிறது. இப் போது நாடாளுமன்றத்தை வழிநடத்த சிறப்புக் குழு ஒன்றை அமைப்பது தொடர்பாக ஆர்வமாக பேசப்படுகிறது.
அரசியல் கட்சிகளும் இதற்கு ஒப்புதல் அளித்தன. ஆகையால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 23ஆம் திகதி காலையில் நாடாளுமன்றம் கூடும்போது இத் தெரிவுக்குழு அந்த அரங்கில் உற்று நோக்கப்படலாம்.
ஆனால் எதிரணியான ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ள தலைகளோ பிரதமரின் செயலாளரின் செலவினங்களை முடக்கும்; நகர்வுக்காக ஒரு கள முனையை திறந்துள்ளனர்.
இந்த நகர்வின் ஊடாக அனைத்து அமைச்சுகளுக்கும் உரியநிதியை முடக்கி நீதியற்ற ஆட்சியை நிதியற்ற ஆட்சியாகவும் காட்சிப்படுத்த எதிரணி நகர முனைகிறது.
ஆனால் மறுபுறத்தே நாடாளுமன்றத்தை வழி நடத்துவதற்கு ஒரு தெரிவுக் குழுவை அமைப்பதில் மகிந்த மைத்திரி தரப்பு ஆர்வம் காட்டுகிறது. நேற்றிர வுமஹிந்த உட்பட்ட சில முக்கிய தலைகள் இக் குழு தொடர்பாக ஆய்வு செய்த நிலையில் இன்று மைத்திரி தலைமையில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பாக பேசியுள்ளனர்.
ரணில்தரப்பு ஒரு அரசாங்கத்தை உருவாக்க இடமளிக்காத வகையில் கால இழுத்தடிப்பு செய்வதில் இப்போது ஆர்வம் காட்டப்படுவது. ரணில் தரப்பு தமக்கு 113 பெரும்பான்மை இருப்பதை நிரூபித்துக் காட்டினாலும், ரணிலை பிரதமராக ஏற்றுக்கொள்ள மைத்திரி இனி முன்வரப்போவதில்லை என்பதே இப்போதைக்குத் தெரிகின்றது.
இதேபோல ஐக்கிய தேசியக் கட்சியில் தன்னைத் தவிர்த்து, இன்னொரு முகத்தை பிரதமராக நியமிக்க ரணில் அனுமதிப்பாரா என்ற வினாவுமஅப்படி ஒரு அரசாங்கம் அமைந்தாலும் அதற்கு மகிந்த மைத்திரி கூட்டணி குடைச் சல் கொடுக்கும் என்பதால் இழுபறி தொடர்கிறது.
இந்த கால இழுத்தடிப்பு ரணில் தரப்புக்கும் சவாலானது. ஏனெனில் கடந்த 3 வாரங்களாக பிரதமர் என்ற முழுத்தகுதி இல்லாமலேயே ரணில் விக்ரமசிங்க அலரிமாளிகையில் தங்கியிருக்கிறார்.
இந்த நிலைமை ஜே.வி.பியையும் இப்போது உறுத்துகிறது. இதனால் அலரி மாளிகையில் இருந்து ரணில் வெளியேற வேண்டுமென அது இப்போது கோரியுள்ளது.
அதுபோல மறுபுறத்தே பிரதமர் என்ற அடிப்படையில் மஹிந்தவுக்கு கிட்டும் உலங்குவானூர்தி பயணசலுகைகள்; போன்ற சலுகைகள் மீளெடுக்கப்பட வேண்டுமென்பதும் ஜே.வி.பியின் நிலைப்பாடு.
இவ்வாறான ஒரு பின்னணியில்தான் இப்போது பௌத்தமஹாசங்கங்களின் காலில் விழுந்து நீதிகோர ஐக்கிய தேசியக்கட்சி முனைகிறது. அதற்காக தனது தரப்பில் இருந்து முக்கியதலைகளை அது களமிறக்கியுள்ளது இந்த தலைகள் அஸ்கிரிய மல்வத்து அமரபுர ஆகிய பீடங்களையும் ராமான்ய மற்றும் சியாம் நிக்காயாக்களையும் சுற்றிச்சுழல்கின்றனர்.
இன்று ஒரு கட்ட சுழற்சி நடந்தது நாளை இன்னொரு கட்டச் சுழற்சி நடக்கி றது. ஆனால் மக்களின் மனச்சுழற்சியோ விரைவில் வேறுவிதமாக கூடும். இரண்டு தரப்புக்கள் மீதும் இது சீற்ற சுழற்சியாக மாறி பொதுத்தேர்த லொன்று வந்து தொலைத்தால் கூட பரவாயில்லை என்ற நிலைப்பாடாகவும் அது உருமாறக்கூடும்.
இந் நிலைப்பாட்டுக்காகத்தான் மைத்திரி தூண்டில் போட்டுக் காத்திருக்கின் றாரா? இதுதான் மைத்திரியின் உபாயமானால் அதில் அபாயங்கள் இல்லாமல் இல்லை.

- நன்றி ஐ.பி.சி. இணையத்திற்கு -