Breaking News

வெளிநாட்டு தூது­வர்களை நேற்­றி­ரவு சந்­தித்து பேச்சு வார்த்தை நடத்தினாா் ரணில்.!

நாட்டின் அர­சியல் நெருக்­கடி நிலைமை தொடர்பில் ஐக்­கிய தேசிய முன்­னணி தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை வெளிநாட்டு தூது­வர்கள் நேற்­றி­ரவு சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ளாா்.

அலரி மாளி­கையில் நடை­பெற்ற இச்­சந்­திப்பில் அமெ­ரிக்கா மற்றும் ஐரோ ப்­பிய ஒன்­றிய நாடு­களின் தூது­வர்கள் பங்­கேற்­ற­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இந்த தூது­வர்­க­ளு­ட­னான சந்­திப்பில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணி யில் அங்கம் வகிக்கும் கட்­சி­களின் தலை­வர்­களும் பங்­கேற்­றுள்­ளனர்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நடை­பெற்ற பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலை­வர்­களின் கூட்­டத்தில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான கட்­சியின் உறுப்­பி­னர்கள் கலந்­து­ சிறப்பித்துள்ளனா்.

இச் சந்­திப்பை அடுத்து அலரி மாளி­கையில் தூது­வர்­க­ளு­ட­னான சந்­திப்பு இடம்­பெற்­றுள்­ளது. இதன்­போது ஜனா­தி­ப­தியின் நிலைப்­பாடு தொடர்­பிலும் தமது கட்சியின் நிலைப்பாடு குறித்தும் ரணில் விக்கிரமசிங்க தூதுவர்களுக்கு விளக் கியுள்ளாா்.