Breaking News

குரல் மூல­மான வாக்­கெ­டுப்பு நிலை­யியல் கட்­ட­ளை­களில் தெரிவிப்பது என்ன?

புதிய பிர­தமர் மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கு எதி­ராக கடந்த புதன் மற்றும் வெள்ளிக்­கி­ழ­மை­களில் பாரா­ளு­மன்­றத்தில் கொண்டு வரப்­பட்ட நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை மீது குரல் பதிவு மூல­மான வாக்­கெ­டுப்பு சபா­நா­யகர் கரு ஜெய­சூ­ரி­ய­வினால் மேற்­கொள்­ளப்­பட்டு அப் பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­ட­தா­கத் தெரி விக்கப்பட்டுள்ளது.

எனினும், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ஷ உள்­ளிட்ட ஆளும்­த­ரப்பு குரல் மூல­மான வாக்­கெ­டுப்பை ஏற்­றுக்­கொள்ள முடி­யா­தெனத் தெரிவிக்கப்பட்டுள் ளது.



இந்­நி­லையில் பாரா­ளு­மன்ற நிலை­யியல் கட்­ட­ளை­களில் குரல் மூல­மான வாக்­கெ­டுப்பு தொடர்பில் கூறப்­பட்­டுள்ள முக்­கிய விட­யங்கள் இது சம்­பந்­த­மான விளக்கம் உள்­ளது.

அதாவது பாரா­ளு­மன்ற நிலை­யியல் கட்­ட­ளை­களில் 47,47(1) ஆம் சரத்­துக்­களில் சபா­நா­ய­க­ரினால் கேள்வி கேட்­கப்­பட வேண்டும். அதன் போது உறுப்­பி­னர்­களால் ஆமோ­தித்தல் அல்­லது நிரா­க­ரித்தல் என்­பது குரல் மூல­மாக வெளிப்­ப­டுத்­தப்­படும் அதனை வாக்­கு­க­ளாகப் பெற்றுக் கொண்டு சபா­நா­ய­க­ரினால் பெறு­பே­றுகள் தெரி­விக்­கப்­படும்.

நிலை­யியல் கட்­டளை 47 இல் தெரி­விக்­கப்­பட்­டி­ருப்­பதன் பிர­காரம் ஏதா­வது ஒரு உறுப்­பினர் பெயரின் அடிப்படையில் வாக்களிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டால் சபாநாயகர் அதற்கு இடமளிக்க வேண்டும் என்பதாகும். 2011 ஜூன் 21 ஆம் திகதி ஹன்சார்ட் அறிக்கை 1523 ஆம் பக்கத்தில் இவ்விடயம் தெரி விக்கப்பட்டுள்ளது.