Breaking News

ஜனாதிபதியை சந்திக்கவில்லை பாராளுமன்றத்தில் அமைச்சரோ, பிரதமரோ இல்லை - மனோ

ஜனாதிபதி மைத்திரிபால சிறசேனவை சிறுபான்மை கட்சித் தலைவர்களான மனோ கணேசன், ரிஷாத் பதியூதீன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனா்.

இச் சந்திப்பு குறித்து தமிழ் முற் போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தனது முகநூல் பக் கத்தில் விவரிக்கையில்...

பாராளுமன்றத்தில், 122 எம்.பி.க்கள், நம்பிக்கை இல்லா பிரேரணையை, மகிந்த மற்றும் அவரது அமைச்சர வைக்கு எதிராக நிறைவேற்றி உள்ளனர் எனவும், ஆகவே இன்று நாட்டில் ஒரு பிரதமரோ, அமைச்சரவையோ கிடையாது.

இந்நிலையில் ஜனாதிபதி சிறிசேன உடனடியாக புதிய பிரதமரையும், அமைச் சர்களையும் நியமிக்க வேண்டுமென ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி, இந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவருடன் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் இனி நடத்தப்படாது எனவும் நாம் ஜனாதிபதிக்கு இதன்போது சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன்போது இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில், சபாநாயகர், ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் உட்பட ஒரு கட்சி தலைவர் கூட்டத்தை கூட்டுவ தாக ஜனாதிபதி தெரிவித்ததுடன், இதற்கான அழைப்பு தமக்கு கிடைத்ததாக வும் மனோகணேசன் தெரிவித்துள்ளாா்.

எனினும் நேற்றிரவு, ஜனாதிபதி, நம்பிக்கை இல்லா பிரேரணையை நிராக ரித்து, ஒரு கடிதத்தை, சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு அனுப்பியுள்ளார். இந்த நிலைப்பாட்டை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

ஆகவே இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற இருந்த கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துக்கொள்ளாமல் நாம் பாராளுமன்றம் செல் வோம். இன்று பாராளுமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களும், “பாராளுமன்ற உறுப்பினர்” களாக மட்டுமே பங்குபற்றுவார்கள்.

இன்று எவரும் அங்கே “பிரதமர்” அல்லது “அமைச்சர்” என்ற அடிப்படைகளில் உரையாற்ற முடியாது. எனத் தெரிவித்துள்ளாா்.