Breaking News

எமது பிரதமரை நாங்களே தெரிவு செய்வோம்: மனோ கணேசன் !

சிறிலங்காவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்சவை எப்படியாவது ஆட்சியில் தக்கவைப்பதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறி சேனவே சிறுபான்மையின கட்சிகளுடன் பேரம்பேசி வருவதாக தமிழ் முற் போக்கு கூட்டணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குற்றம் சுமத்தியுள்ளாா்.

மஹிந்தவிற்கு ஆதரவு தெரிவித்தால் அமைச்சுப் பதவிகளை தருவதாக குறிப்பிட்ட அரச தலைவர் அதனை நிராகரித்தபோது, ரணில் விக்கிரம சிங்கவை பிரதமராக நியமிக்க வேண் டாமென கேட்டுக்கொண்டதாகவும் நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளாா்.

சிறிலங்கா அரச தலைவருடன் தமிழ் முற்போக்கு கூட்டணி நடத்திய கலந் துரையாடல் தொடர்பில் அளித்த பிரத்தியேக செவ்வியிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

மைத்ரி - ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தை முடிவுக்கு கொண்டுவந்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரது எதிரியாக அடையாளப்படுத்திவந்த முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்சவை அழைத்து ஒக்டோபர் 26 ஆம் திகதி புதிய பிரதமராக நியமித்துள்ளாா்.

எனினும் இந்த நியமனம் அரசியல் யாப்புக்கும், ஜனநாயகத்திற்கும் முர ணானது என ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி யினரும், அதேபோல் சர்வதேச சமூகமும் குற்றம்சாட்டி வருகின்ற அதே வேளை நாடாளுமன்றத்தை கூட்டுமாறும் வலியுறுத்தியுள்ளனா்.

தமக்குத் தேவையான பெரும்பான்மை இருப்பதாக சூளுரைத்துவரும் புதிய பிரதமர் மஹிந்த மற்றும் மைத்ரி அணியினர், தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினர்களை தமது அணியில் சேர்ப்பதற்காக முயன்று வருகின்றனர்.

இதன்போது கோடிக்கணக்கான பணத்தை முன்வைத்து நாடாளுமன்ற உறுப்பி னர்கள் பேரம் பேசப்படுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வரு கின்றது.

இந்த நிலையில் மஹிந்தவிற்கான பெரும்பான்மையை உறுதிசெய்யும் வகை யில், அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன சிறுபான்மையினக் கட்சி களை அழைத்து மஹிந்தவிற்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுத்து வருகின் றார்.

இதற்கமைய நேற்று காலை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அழைப் பின் பேரில் அவரது இல்லத்தில் தமிழ் முற்போக்கு முன்னணியைச் சேர்ந்த ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேரில் சென்று கலந்துரையாடியதாக தெரிவித்த குறித்த கூட்டணியின் தலைவர் மனோ கணேஷன், இதன் போது மஹிந்தவிற்கு ஆதரவு வழங்கினால் அமைச்சு பதவிகளை தருவதாக மைத்ரி பேரம் பேசியதாகவும் தெரிவித்துள்ளாா்.

சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையி லான அரசாங்கத்தில் அங்கம் வகிக்க முடியாதென திட்டவட்டமாகக் குறிப் பிட்ட தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், தமது பிரதமரை தாங்களே தெரிவு செய்வோமென அரச தலைவர் மைத்திரிபால விடம் மிகத் தெளிவாக கூறிவிட்டதாகத் தெரிவித்துள்ளாா்.