பொதுத் தேர்தலை இலக்கு வைத்த மகிந்த!
நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி வெளி நாட்டு சக்திகளுடன் இணைந்து பாரிய சதித்திட்டமொன்றை முன்னெடுத்துள் ளதாக சிறிலங்கா ஜனாதிபதியினால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளாா்.
சிறிலங்கா ஜனாதிபதியால் அரசியல் சாசனத்திற்கு அமையவே தான் பிரத மராக நியமிக்கப்பட்டதாகவும் குறிப் பிட்டுள்ள மஹிந்த, எனினும் வெளி நாடுகளினதும், ஐக்கிய தேசியக் கட்சி யினதும் தேவைகளை நிறைவேற் றிக் கொடுக்க அந்த நியமனத்தை நாடாளுமன்றில் கேள்விக்கு உட்படு த்த சபாநாயகரும் துணை போவதாகவும் கூறி தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
அதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு விரைவில் பொதுத் தேர்தலுக்கு செல்வதே ஒரே தீர்வு என்றும் வலியுறுத்தியுள்ள மஹிந்த இந்த யோசனைக்கு ஆதரவு வழங்குமாறும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறிலங்காவின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ச நேற்று நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக நாடாளுமன்ற அவைக்குள் சென்று பிரதமர் ஆசனத்தில் அமர்ந்துகொண்டதுடன், அவரது அமைச்சர்களும், நாடா ளுமன்ற உறுப்பினர்களும் ஆளும் கட்சி ஆசனத்தில் அமர்ந்திருந்தனர்.
இதற்கமைய நாடாளுமன்றம் கூடிய போது, அவைக்குள் வந்த சபாநாயகர் கரு ஜயசூரிய மஹிந்தவிற்கு எதிராக நாடாளுமன்றில் நம்பிக்கையில்லாப் பிரே ரணையொன்று நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் மஹிந்தவை தன்னால் பிரதமராக ஏற்றுக்கொள்ள முடியாதெனத் தெரிவித்துள்ளாா்.
சபாநாயகரின் இற்த அறிவிப்பை நிராகரித்த மஹிந்தவாதிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன் கூச்சலிட்டனர். இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியினரும் மஹிந்த பிரதமராக உரையாற்ற முடியாதெனக் கூச்சலிட்டதால் குழப்பம் ரணகளமாக மாறியுள்ளது.
எனினும் சபாநாயகர் வேறு வழியின் மஹிந்தவிற்கு உரையாற்ற அனுமதித் தார். இதற்கமைய உரையாற்ற ஆரம்பித்த மஹிந்த நாட்டின் சொத்துக்களை வெளிநாடுகளிடம் விற்கு, பாரிய ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு நாட்டை பெரும் நெருக்கடிக்குள் தள்ளியதாலேயே ரணிலை பிரதமர் பதவியில் இரு ந்து நீக்கிய ஜனாதிபதி, தன்னை அப் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்ததாகத் தெரிவித்துள்ளாா்.
அதேவேளை மைத்ரி – கோட்டா படுகொலை, அமைச்சரவையில் தொடர்ந்த மோதல்கள் என்பனவும் காரணங்களாக அமைந்ததாகவும் தெரிவித்தார். கட ந்த ஆட்சியில் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாத படியினால் தான் பிரதமராக என்னை ஏற்றுக்கொள்ளும்படி ஜனாதிபதி தெரிவித்துள்ளாா்.
நான் பிரதமராக பதவியேற்றதன் பின்னர் நாட்டு மக்களிடம் ஒரு எதிர்பார்ப்பு ஒளி பிரகாசித்தது. திருடர்களின் பட்டியல் என்னிடம் உள்ளது. தூதரகங்க ளுடன் இணைத்துக்கொண்டு, வெளிநாடுகளின் தேவைக்கு அமைய நிலை யியற் கட்டளைச் சட்டத்ததை மீறி எனக்கு எதிராக பிரேரணை நிறைவேற்றப் பட்டுள்ளது.
அதற்கு சபாநாயகரும், தாம் சார்ந்த கட்சியுடன் சேர்ந்த செயற்பட்டார். கூச்சல், குழப்பங்களுக்கு மத்தியில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்ற முடியாது. சபாநாயகரின் போலியான பிரேரரணையை பயன்படுத்தி சிலர் பிரதமர், அமைச்சுப் பதவிகளை கோரினார்கள்.
ஆனால் பிரதமர் பதவியை சபாநாயகர் அல்ல ஜனாதிபிதியே நியமிப்பார். அரசியல் அமைப்பின்படி உள்ளது. தெரிந்துகொண்டே சபாநாயகர் அதனை செய்கின்றார்.
இப் பிரச்சனையை தீர்க்கும் பொறுப்பை 225 உறுப்பினர்களின் கைகளுக்கு வழங்குவதை விடுத்து வாக்காளர்களின் கைகளுக்கு வழங்குவோமென நான் யோசனை முன்வைக்கின்றேன்.
இதுவே நாடாளுமன்ற சம்பிரதாயம். அரசியலமைப்பின்படி உரிமைகள் நாடா ளுமன்றத்திற்கு அல்ல. மக்களிடமே உள்ளது. இதற்காக ஜே.வி.பிக்கு நான் நன்றி கூறுகிறேன. நாடாளுமன்ற தேர்தலை வைக்கும்படி யோசனை முன் வைத்தால் ஒத்துழைப்பதாக கூறினார்கள்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு என்ன? ஆதரவா? நாங்கள் அதனை கொண்டுவருவோம். புதிய அரசாங்கத்தை தெரிவுசெய்வதற்கு நீதியான தேர் தலை நடத்துவதற்கு என்னுடன் இணையும்படி 225 உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றேன்”.
சிறிலங்காவில் மேலும் மோசமடைந்துள்ள இந்த அரசியல் குழப்பம் தொடர்ந் தால் வேறு வழியின்றி பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டிய கட்டாயத் திற்குள் அனைத்துத் தரப்பினரும் தள்ளப்பட்டுள்ளனர்.
அதனால் கூடிய விரைவில் பொதுத் தேர்தலொன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பொதுத் தேர்தலை இலக்கு வைத்து மஹிந்த தனது நேற்றைய விசேட உரையில் சில சலுகைகளையும் மக்களுக்கு அறிவித்துள் ளாா்.
பொதுத் தேர்தலே எமக்கு வேண்டும். இன்று பெருந்தோட்டத் தொழிலாளர் களின் 1000 ரூபா சம்பளப் பிரச்சினை உள்ளது. அது நியாயமான கோரிக்கை. மறுபக்கம் நாளாந்தம் அதிகரிக்கும் விலைகளை குறைக்கும்படி கோருகிறார் கள்.
இன்று சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை குறையும்போது விலைச் சூத்திரத்தின்படி அதிகரிக்கின்றது. ஆனால் இன்னும் விலைகளை குறைக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. இன்று இரவே எரிபொருள் விலை களை குறைக்கின்றோம்.
நாங்கள் சுயாதீனமாக செயற்படும் சபாநாயகர் ஒருவரை எதிர்ப்பார்க்கின் றோம். உங்கள் நியமனத்தை இச் சபை அங்கீகரித்தது. எனினும் இன்று நீங்கள் உங்கள் கட்சிக்காகவும், உங்கள் வெளிநாட்டு பிரதி நிதிகளுக்காகவும் செயற் படுகின்றீர்கள்”. எனத் தெரிவித்துள்ளாா்.