Breaking News

சபாநாயகர் வீடு செல்ல நேரிடும் என்கிறாா் - தினேஷ்!

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இம்மாதம் 14 ஆம் திகதி நாடாளு மன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் போது தற்போதைய சபாநாயகர் கருஜயசூரிய வீட்டுக்குச் செல்ல வேண்டியிருக்குமென புதிதாக நியமிக்கப் பட்டுள்ள சபை முதல்வர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளாா்.

நாடாளுமன்ற சுற்று வட்டாரத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பி னால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக் கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரி வித்துள்ளாா்.

மக்களின் தீர்விற்கமையவே தற்போதைய புதிய அரசாங்கம் அமைக்கப்பட் டுள்ளது. அதனை மீறி செயற்படுவதற்குரிய அதிகாரம் யாருக்கும் கிடையாது.

நாட்டின் ஜனநாயகம் பேணப்பட வேண்டியது நாடாளுமன்றத்திலே தவிர ரணில் விக்ரமசிங்க படுத்து உறங்கும் அலரிமாளிகையில் அல்ல எனத் தெரி வித்துள்ளார்.

மேலும் நாட்டின் சபாநாயகரொருவர் தன் கட்சி சார்பாக செயற்படுவது கூட அரசியலமைப்பை மீறும் செயற்பாடு என்பதை கருஜயசூரிய புரிந்துகொள்ள வேண்டும் எனவும் சபை முதல்வர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளாா்.

ஜனாதிபதியால் வெளியிடப்படும் வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரமே சபாநாயகர் செயற்பட முடியுமே தவிர, அவருக்கு எந்த தன்னிச்சையான அதி காரமும் கிடையாது. தன்னிடமில்லாத அதிகாரத்தை கொண்டு சபாநாயகர் செயற்பட முற்படுவாரானால் விரைவில் வீடு செல்ல வேண்டிய நிலை வரும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் பாராளுமன்ற அமர்வினை கூட்டுவதற்கும், ஒத்தி வைப்பதற்கும் இடைநிறுத்துவதற்குமான அதிகாரம் நாட்டின் தலைவர் என்ற ரீதியில் ஜனா திபதியிடம் மாத்திரமே உள்ளதெனத் தெரிவித்துள்ளாா்.