முப்படைகளின் பிரதானி முன்னிலையில் முக்கிய சாட்சி மீது தாக்குதல்
கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்படடு கொலை செய்யப்பட்ட சம்ப வம் தொடர்பிலான முக்கிய சாட்சியொருவர் முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன முன்னிலையில் கடற்படையை சேர்ந் தவர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
கடற்படை அதிகாரி லக்சிறி கல கமகே என்பவரே இவ்வாறு தாக்குத லிற்கு உள்ளாகியுள்ளார். தாக்குத லிற்கு உள்ளான கடற்படை அதிகாரி இது தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இதனை தொடர்ந்து பொலிஸார் கடற்படை தலைமையகத்திற்குச் சென்று சம்ப வம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டுள்ளனர்.
எனினும் விசாரணைகளை மேற்கொள்வதற்கு பொலிஸாரிற்கு அனுமதி வழங்கப்படவில்லையென தகவல்கள் வெளியாகியுள்ளன. 11 தமிழ் இளைஞர் கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் முக்கிய சாட்சியென சந்தேகிக்கப்படும் நேவி சம்பத் தலைமறைவாகயிருப்பதற்கு உதவினார் என முப்படைகளின் பிரதானி மீது குற்றப்புலனாய்வு பிரிவினர் குற்றம் சாட்டியுள் ளதும் நீதிமன்றம் அவரை கைது செய்வதாகத் தெரிவித்துள்ளது.