Breaking News

காலங்கடந்த ஞானம் என்றாலும் மைத்திரிக்கு வரவில்லையா?..!

இலங்கை ஜனாதிபதி அதிகார மோகத்தில் மக்களை, நாட்டினை மறந்து செயற்பட்டு வருவதுடன் மேலும் நாட்டில் பாரிய இடி விழுந்தாலும் பரவா யில்லை நான் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்றே ஜனாதிபதி நினைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளாா்.

நாடாளுமன்றத்தில் நேற்று மக்கள் விடு தலை முன்னணி கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றுகையில் இவ்வாறு தெரி வித்துள்ளார்.

ஜனாதிபதி சட்டவிரோதமான பிரதமர் ஒருவரை வைத்துகொண்டு ஆட்சி செய்து வருகின்றார். ஆனால் நாட்டில் இன்று ரூபாவின் விலை பாரிய அளவில் வீழ்ச்சி கண்டு வருகின்றது. கடன் சுமை அதிகரித்து வருகின்றது. இதனை பொதுமக்களே சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே ஜனாதிபதி இப்போதே அரசியல் அமைப்பினை மீறி நாட்டினை நாச மாக்கி விட்டார். ஆகவே இன்றும் நாம் எமது பெரும்பான்மையை நிரூபித்து விட்டோம்.

ஜனாதிபதி விட்ட தவறை சரிசெய்ய ஒரு வாய்ப்பு உள்ளது. இப்போதும் காலம் உள்ளது, காலம் கடந்துவிட்டது தான். இருப்பினும் காலம் கடந்தேனும் அவர் மக்களுக்காக ஒரு தீர்மானம் எடுக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.