மிளகாய்தூள் தாக்குதலுக்கு இலக்காகிய நாடாளுமன்ற உறுப்பினரின் அதிரடி! (காணொளி)
சிறிலங்கா நாடாளுமன்றத்திற்குள் வைத்து மிளகாய்தூள் தாக்குதலுக்கு உள்ளான ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்கிரம பெரேரா நேற்றைய தினம் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளாா்.
நாடாளுமன்றில் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் விரும்பத் தகாத சம்பவங்களை முற்றாக அகற்றி நாடாளுமன்றத்தின் கௌரவத்தை பாது காக்கவே தான் இம் முறைப்பாட்டை செய்ததாக காமினி ஜயவிக்கிரம பெரேரா தெரிவித்துள்ளாா்.
சிறிலங்காவில் யார் பிரதமர் என்ற குழப்பம் நீடித்துவரும் நிலையில் மஹிந்த வாதிகளால் நவம்பர் 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்திற்குள் மிகவும் மோசமான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன.
நாட்டின் மூலச் சட்டமான அரசியல் சாசனம், வேதாகமம் உள்ளிட்ட உயரிய புத்தகங்களைக் கொண்டும், கதிரைகளை உடைத்தும் சபாநாயகர் மீதும், சபாநாயகருக்கு பாதுகாப்பு வழங்கிய பொலிஸார் மீதும் தாக்குதல் நடத்திய மஹிந்தவாதிகள் அன்றைய தினம் பெரும் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனா்.
இதன்போது மஹிந்தவாதிகள் மிளகாய்த் தூள் கரை க்கப்பட்ட தண்ணீரைக் கொண்டு நடத்திய தாக்குதல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சபாநாயக ரின் பாதுகாப்புக்காக அவைக்குள் நுழைந்த பொலி ஸார் மீதும் மிளகாய்த் தூள் தாக்குதல் நடாத்தப் பட்டுள்ளது.
இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்கிரம பெராரே மற் றும் ஜே.வி.பி யின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் ஆகியோரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
மஹிந்தவாதிகளின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தை வெளியிட் டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக் கிரம நேற்றைய தினம் பொலிஸ் தலைமையகத்திற்கு சென்று முறைப்பா டொன்றை பதிவு செய்துள்ளார்.
நாடாளுமன்றில் மேற்கொள்ளப்பட்ட மிளகாய்த்தூள் தாக்குதலுக்கு நீதி கோரி மேற்கொண்ட இந்த முறைப்பாடு தொடர்பில் பொலிஸ் தலைமையகத்திற்கு வெளியில் கூடியிருந்த ஊடகவியலாளர்களுக்கும் தெளிவுபடுத்தியுள்ளாா்.
“1972 ஆம் ஆண்டு டட்லி சேனநாயக்க தான் என்னை அரசியலிற்குள் பிர வேசிக்க வைத்தார். ஆனால் எனது வாழ்நாளில் இதுவரை நான் பொலிஸ் தலைமையகத்திற்கு வந்து எந்த முறைப்பாடொன்றை மேற்கொண்ட தில்லை.
எனினும் நாடாளுமன்றில் அன்று இடம்பெற்ற இவ்வாறான சம்பவங்கள் மேலும் பயங்கரமான நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. அதனால் நாடா ளுமன்றத்தை சுத்தமாக்கியதன் பின்னரே அரசியல் வாழ்விலிருந்து நான் ஓய்வு பெறுவேன் என்று அண்மையில் ஒரு முறை தெரிவித்தும் இருந்தேன்.
அதற்கமையவே இன்று நான் இந்த முறைப்பாட்டை பதிவு செய்தேன். அப் பாவி மக்கள் எம்மை அவர்களது வாக்குகள் மூலம் நாடாளுமன்றுக்கு தேர்வு செய்துள்ளனர்.
அவர்களிற்கு சேவை செய்யும் இடம் சுத்தமான பூமியாக இருக்க வேண்டும்”. என்றார். சிறிலங்கா ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வழங்கிய அனைத்து வாக் குறுதிகளையும் மீறி, ஊழல்வாதிகள் என்று அவரே பகிரங்கமாக குற்றம் சாட்டி வந்த தரப்பினருன் இணைந்து கூட்டணி அமைத்துள்ளதாலேயே நாடா ளுமன்ற வரலாற்றில் ஒருபோதும் இடம்பெறா சம்பவங்கள் நடை பெற்று வரு வதாக காமினி ஜயவிக்கிரம பெரேரா குற்றம் சுமத்தியுள்ளாா்.
நாடாளுமன்ற அவைக்குள் மிளகாய்தூள் வீசிய மஹிந்தவாதிகள், ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது அசீட் வீசவும் திட் டமிட்டிருந்ததாக புதிய தகவலொன்றையும் ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்கிரம பெரேரா தெரிவித்துள்ளாா்.
“2015ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரியுடன் இணைந்து ஊழல் மோசடிகள் அற்ற அரசாங்கத்தை அமைப்பதோடு, அவ்வாறு ஊழல் மோசடிகளில் ஈடுபட் டவர்களையும் சிறைப்பிடித்து, நல்லாட்சியினை உருவாக்குவதாக மக்க ளுக்கு வாக்குறுதி அளித்தோம்.
எனினும் அது இன்று தடுக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்றுள்ள சம்ப வங்களை அவதானிக்கையில், இருதரப்பினருக்குமிடையே மோதல் நிலை உருவாகியுள்ள போதிலும் எமது தரப்பினர் நாடாளுமன்றில் மிகவும் அமை தியாக இருந்தனர்.
ஆனால் எமது தரப்பினரும் மோதலில் இறங்கியிருந்தால் நாடாளுமன்ற அவைக்குள் அசிட் வீசும் திட்டமும் இருந்ததாகத் தற்போது எமக்கு தெரிய வந்துள்ளது. என் மீது தாக்குதல் நடாத்திய காணொளிகள் உள்ளன.
சபாநாயகர் மேசையிலிருந்த புனித வேதாகமத்தைக் கொண்டு என்னைத் தாக்கினர். அது எனது வயிற்றில் படும் போதே அதை நான் அவதானித்தேன். அங்கிருந்த நெரிசலில் என் மீது தாக்குதல் நடாத்துவதை நான் அவதானிக்க வில்லை.
அதேபோல சபாநாயகர் சபையினை விட்டு வெளியேறும் போது எனது முகத் திற்கு மிளகாய்த் தூளைக் கொண்டு தாக்குதலை நடாத்தினர். அரசியலில் இருந்து ஓய்வுபெறும் முன்பு ஊழல் மோசடியினை முற்றாக ஒழித்து, நாடா ளுமன்றத்தை சுத்தமான பூமியாக்குவோமென நாம் அனைவரும் சத்தியப் பிரமாணம் எடுக்க வேண்டுமென்பதனாலே இன்று முறைப்பாட்டினையும் செய்தேன் எனத் தெரிவித்துள்ளாா்.