Breaking News

எமது கோரிக்கைகளை தட்டிக்கழிக்க கூடாது: யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம்! (காணொளி)

யாழ்ப்பாணம் பல்கலைகழக மாணவர்கள் தொடர்ச்சியாக தமிழ் மக்களது உரிமைகள், தேசியம், சுயநிர்ணயம் என்பவற்றை வலியுறுத்தும் வகையி லேயே செயற்படுவார்கள் என யாழ்.பல்கலைகழகத்தின் அனைத்துப் பீட முன்னால் மாணவர் ஒன்றிய தலைவர் கிருஸ்னமேனன் தெரிவித்துள்ளார்.

யாழ்.பல்கலைக்கழகத்தின் கடந்த ஆண்டுக்கான மாணவர் ஒன்றியத் தின் பதவிக் காலமானது நேற்றைய தினம் நண்பகலுடன் நிறைவடைந்தி ருந்தது. இதன்போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே மாண வர் ஒன்றிய தலைவர் மேற்கண்ட வாறு தெரிவித்துள்ளாா்



 மேலும் கூறுகையில்,

தமிழ் மக்களுடைய பிரிதிநிகள் தவறவிடும் போது யாழ்.பல்கலைகழக மாண வர்கள் அதனை சுட்டிக்காட்டுவார்கள். அத்துடன் அது தொடர்பாக மக்களுக் கும் தெளிவுபடுத்துவார்கள். அதேபோன்று எமது கோரிக்கைகள் என்பது ஒட்டு மொத்த தமிழ் மக்களின் கோரிக்கைகளாகவே எப்போதும் அமைந்திருக்கும்.

அவ்வாறான எமது கோரிக்கைகளை மக்கள் பிரதிநிகளாகிய நீங்கள் கவன மெடுக்க வேண்டுமே தவிர தட்டிக்கழிக்க கூடாது. அதேபோன்று மாணவர்கள் முன்னெடுக்க நியாயமான போராட்டங்களுக்கு நீங்கள் ஆதரவு வழங்காது விடினும், அவற்றிக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்பதை கூறிக்கொள் கின்றோம்.

யாழ்.பல்கலைகழகமானது ஒரு சமூகத்தின் குரலாகவே செயற்பட்டு வருகின் றது. எமது தமிழ் பிரதிநிகள் அத்தகைய மாணவர்களின் இருப்பை பாதுகாக்க வேண்டும். அந்த வகையில் எமது அடுத்த மாணவர் ஒன்றியமும் மாணவர்க ளும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைகளுக்காகவும், தேசியம், தாயகம் என்ற பாதையிலேயே பயணிக்குமெனத் தெரிவித்துள்ளாா்.