ரணில் ஆட்சியமைத்தால் பதவியிலிருந்து விலகுவதாக ஜனாதிபதி.!
ரணில் விக்கிரமசிங்க பெரும்பான்மையை நிரூபித்து மீண்டும் ஆட்சியமைக்க முயன்றால் நான் பதவி விலகுவேன். பதவி விலகி வீதியில் இறங்கி மஹிந்தவுடன் இணைந்து செயற்பட நான் தயாராகவுள்ளேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர்கள் கூட்டம் நேற்று நண்பகல் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, கடந்த மூன்றரை வருடங்களாக இடம்பெற்ற ஆட்சியில் பெறுமதியில்லாத நிலையிலேயே நான் இருந்தேன். 2015 ஆம் ஆண்டு மஹிந்தவின் ஆட்சியிலிருந்து எவ்வாறு அதிருப்தியுடன் விலகினேனோ அதைவிட அதிகமான அதிருப்தியுடனேயே தற்போது அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதாகத் தெரிவித்துள்ளாா்.
தற்போது புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்க பெரும்பான்மையைக் காண்பித்து ஆட்சி அமைக்க முனைந் தால் எனது பதவியிலிருந்து நான் விலகுவேன்.
ஏனெனில் தவறு என்று கூறி எந்த அரசாங்கத்திலிருந்து வெளியேறினோமோ அந்த அரசாங்கத்துடன் மீண்டும் செயற்படுவது என்பது முடியாத காரியமா கும். அவ்வாறான நிலை ஏற்பட்டால் வீதியில் இறங்கி மஹிந்தவுடன் இணை ந்து வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கு நான் தயாராகவே உள்ளேன்.
எனவே மஹிந்தவுடன் இணைந்து கட்சியை முன்கொண்டு செல்ல நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஒன்று சேர்ந்து பணியாற்ற வேண்டும். கடந்த அரசாங்கத்தில் நாம் உரிய மதிப்பின்றியே நடத்தப்பட்டிருக்கின்றோம். இதனால் தான் நாம் புதிய அரசாங்கத்தை அமைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளாா்.