Breaking News

யாழில் விடுதலைப்புலிகளின் தலைவரின் பிறந்தநாளை கொண்டாடிய மாணவர்கள்!

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

தலைவர் பிரபாகரனின் 64-ஆவது பிறந்த நாள் இன்றாகும். இப்பிறந்த நாள் நிகழ்வை தாயகத்திலும் வெளி நாடுகளிலும் பலரும் மிக விமர்சை யாக கொண்டாடி வருகின்றனர்.

இந் நிலையிலேயே நள்ளிரவு வேளை யில் பிறந்த நாள் கேக் வெட்டி பல் கலைக்கழக மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்குள் கொண்டாடியுள்ளனர். இதேவேளை பிரபாகரனின் இன்றைய (26) பிறந்த நாளை முன்னிட்டு பிரபாகர னின் சிந்தனை எனக் குறிப்பிட்டு அவரின் பல சிந்தனைகளையும் வெளிப்படுத் தும் வகையில் சுவரொட்டிகள் பல்கலைக்கழகத்திற்குள் ஒட்டப்பட்டுள்ளன.

மேலும் நாளை மாவீரர் தின நிகழ்வுகள் அனுஷ்டிப்பதற்கு பல இடங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்ற நிலையிலையே தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வு கொண்டாடப்பட்டுள்ளது.