மைத்திரியோ, மஹிந்தவோ, ரணிலோ தமிழர்களிற்கு தீர்ப்பு வழங்கப் போவதில்லை.! (காணொளி)
சிறிலங்கா ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவோ அல்லது அவரால் பிரத மராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்சவோ, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவோ தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு போதும் தீர்வு வழங்கப் போவதில்லையென சிறிலங்கா ஜனாதிபதியின் வன்னி மாவட்டத்தின் அபிவிருத்திக்கான விசேட பணிப்பாளர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளாா்.
சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனவினால், வன்னி மாவட்ட அபிவிரு த்தி வேலைத்திட்டங்களுக்கான விசேட பணிப்பாளராக 2016 ஆம் ஆண்டு டிசெம்பர் 21 ஆம் திகதி நியமிக்கப்பட்ட பிரபா கணேசன் இன்றைய தினம் முல்லைத் தீவில் அவரது கட்சியான ஜனநானயக் மக்கள் காங்கிரஸின் அலுவலகமொன்றை திறந்துவைத்து உரையாற்றுகை யிலேயே இத் தகவலை முன்வைத்துள்ளாா்.
ஜனநாயக மக்கள் காங்கிரசின் மாவட்ட காரியாலயம் முல்லைத்தீவு புதுக் குடியிருப்பு பகுதியில் அக் கட்சியின் தலைவரான வன்னி மாவட்டத்தின் அபி விருத்திக்கான விசேட பணிப்பாளர் பிரபா கணேசன் திறந்து வைத்துள்ளாா்.
இதனையடுத்து அங்கு கூடியிருந்தவர்கள் முன்னிலையில் உரையாற்றிய பிரபா கணேஸன், சிங்கள மக்களின் வாக்குகளை இழந்து தமிழ் மக்களுக்காக செயற்பட எந்தவொரு பெரும்பான்மையின தலைவர்களும் தயாரில்லை எனத் தெரிவித்துள்ளாா்.
சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் அவரால் அதிரடியாக பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் நெருக்கமான அரசியல்வாதியான பிரபா கணேசன், முல்லைத்தீவில் தமிழ் மக்களின் காணி கள் பறிபோய்கொண்டிருப்பதாகவும் கவலை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் வன்னி மாவட்டத்தில் தமிழ் அமைச்சர் ஒருவர் இல்லாத காரணத்தினால் முஸ்லீம் மக்களின் பிரதிநிதிகள் முஸ்லிம் குடியேற்றங் களை முன்னெடுப்பதாகவும், இதனால் தமிழர்களின் நிலங்கள் பறிபோவதாக வும் கணேசன் கூறியிருக்கின்றார்.
எவ்வாறாயினும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் நேரடிக் கட்டுப் பாட்டில் இருந்துவரும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள வன இலாகத் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம் ஆகியவற்றினால் தமிழர்களின் நிலம் பறிக்கப்பட்டு வருவதாக தமிழர் தரப்பினால் தொடர்ச்சியாக குற்றம்சாட்டப்பட்டு வருகின்றது.
மகாவெலி எல் வலையம் என்ற பெயரில் முல்லைத்தீவில் பாரிய சிங்கள குடியேற்றங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதுடன், பௌத்தர்களே இல்லாத முல்லைத்தீவு உட்டபட வன்னிப் பகுதிகளில் புதிதாக பௌத்த ஆல யங்களும், புத்தர் சிலைகளும், தூபிகளையும் நிறுவி வருவதாகவும் தமிழர் தரப்பில் தொடர்ச்சியாக கவலைகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான தற்போதைய ஆட்சியினராலும், இராணுவம் உள்ளிட்ட அரச படையினரைப் பயன்படுத்தி யும், அவர்களது கட்டுப்பாட்டிலுள்ள அரச திணைக்ககங்களைக் கொண்டும் முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி தமிழர் தரப்பினரால் பல தடவைகள் பாரிய கண்டனப் பேரணிகள் மற்றும் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

- நன்றி ஐ.பி.சி. இணையத்திற்கு -