ஸ்ரீலங்காவில் முன்னெடுக்கப்பட்டுள்ள அரசியல் சூழ்ச்சியில் சிக்கிய த.தே.கூ!
ஸ்ரீலங்காவில் மிக மோசமான அரசியல் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரு வதாக குற்றம் சுமத்தியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இந்த சூழ்ச்சியில் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிக்கியிருப்ப தாகத் தெரிவித்துள்ளது.
காணி விடுவிப்பு உள்ளிட்ட தமிழ் மக் களின் அவசரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்திருக்கும் நிலையில், கூட்டமைப்பு ரணில் விக் ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் சூழ்ச்சிக்கு துணைபோவதை கைவிட வேண்டு மென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஸ்ரீலங்காவில் தற்போது ஏற்பட்டுள்ள, அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த 20ஆம் திகதி கொழும்பிலுள்ள அனைத்து இராஜதந்திரிகளையும் சந்தித்திருந்தது.
இதன்போது, சட்டவிரோதமான மஹிந்த ராஜபக்ச தலைமையிலான, அரசாங் கத்திற்கு முடிவுகட்டி, நாட்டில் அரசியல் ஸ்தீரதன்மையை ஏற்படுத்துவதற்கு அழுத்தம் கொடுக்குமாறு வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்தது.
மேலும், நாடடில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் நெருக்கடி காரணமாக தமிழ் மக்களே அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்க் கூட்டமைப்பு வலியு றுத்தியிருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், இச் செயற்பாடுகள் தொடர்பில் கடும் அதி ருப்தி அடைந்துள்ள மஹிந்த - மைத்திரி தரப்பினர், கூட்டமைப்பை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ் மக்கள் உள்ளிட்ட, சிறுபான்மை மக்களுக்கு குறிப்பிட்டு சொல்லக்கூடிய பிரச்சினைகள் எதுவும் இல்லையெனத் தெரிவித்துள்ள, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசசார்பற்ற நிறுவனங் கள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் சூழ்ச்சிக்குள் சிக்கி தவறான பிரசா ரங்களை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.
மேலும் தெரிவிக்கையில்:
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று முன்தினம் வெளிநாட்டு இராஜ தந்தி ரிகளை சந்தித்துள்ளது. ஸ்ரீலங்காவில் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு சிறு பான்மை மக்களுக்கு பிரச்சினைகள் இல்லை.
வடக்கு கிழக்கில் உள்ள பாடசாலைகள், கோயில்கள் உள்ளிட்ட பொது இடங் களில் உள்ள அனைத்து இராணுவ முகாம்களையும் அகற்றுவதற்கு ஜனாதி பதி தீர்மானித்துள்ளார்.
அதனைவிட அபிவிருத்திக் குழு கூட்டங்களில் பங்கேற்ற ஜனாதிபதி, மேலும் அபிவிருத்திகளை பெற்றுக்கொடுக்க தீர்மானித்துள்ளார். சிவில் பாதுகாப்பு தொடர்பான அமைச்சு, ஐக்கி தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு உட்பட்ட தாகவே முன்னர் அமைந்திருந்தது.
இருப்பினும் அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ் விடயம் தொடர் பில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மக்களின் நல னுக்கும் அபிவிருத்திக்கும் மேற்கொள்ளப்படவேண்டிய முக்கிய பணிகளை முன்னைய அரசாங்கம் மேற்கொள்ள தவறிவிட்டது.
எனினும் அபவிருத்தி நடவடிக்கைகளுக்கும், நிதி ஒதுக்கீட்டுக்கும், சமாதா னத்திற்கும், நல்லிணக்கத்திற்கும் வழியேற்படுத்துகின்ற நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏன் இச் சூழ்ச்சிக்குள் சிக்கிக்கொண்டதாகத் தெரிய வில்லை.
இதன் பின்னணியில் அரச சார்பற்ற நிறுவனங்கள் காணப்படுகின்றன. மிகப் பெரிய சூழ்ச்சி காணப்படுகின்றது. நாட்டின் அமைதியை குலைக்கும் இச் செயற்பாடுகளுக்கு எதிராக நாம் ஒன்றிணைய வேண்டுமெனத் தெரிவித் துள்ளாா்.