Breaking News

கார்த்திகை 27ல் அரசியல் பேச்சிற்கு இடமில்லை.!

எதிர்வரும் கார்த்திகை 27 ஆம் திகதி வட கிழக்கு பகுதிகளில் மாவீரர் துயிலு மில்லங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் மிக விமர்சையாக நடைபெற ஒழுங்கமைக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் அம்பாறை மாவட் டத்தில் பெயர் போன கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலுமில்லங்களில் முன் னேற்பாடுகள் மற்றும் நிகழ்வுகள் தொடர்பாக அதன் பணிக்குழுவின ரின் கலந்துரையாடல் நேற்று 20 திருக்கோவில் 01 வாகீஸ்டர் வீதியில் அமைந்துள்ள வலிந்து காணாமலாக் கப்பட்டோர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

இக்கலந்துரையாடலின் பின் தீர்மானிக்கப்பட்ட விடயங்கள் சம்பந்தமாக ஊட கங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அப்பணிக்குழுவின் தலைவர் நாகமணி கிருஸ்ணபிள்ளை இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

மேலும் இது தொடர்பான கூறுகையில்... கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்ட கஞ்சிகுடிச்சாறு துயிலுமில்லமானது ஒரு பெயர் போன துயிலுமில் லமாகும் காரணம் எண்ணூறுக்கு மேற்பட்ட மாவீரர்களின் வித்துடல்கள் இத் துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெற ஏற்பாடு செய்திருக்கின்ற மாவீரர் தின அனுஸ்டிப்பு நிகழ்வில் இன மத கட்சி பேதமின்றி அனைவரும் வருகை தந்து எமது தேசத்திற்காகவும் எமது மண்ணிற்காகவும் உயிர்நீத்த மாவீரர் செல்வங்களுக்கு மலரஞ்சலி செலுத்தி அகவணக்கம் செய்யுமாறு சகலரையும் அழைப்பு விடுக்கின்றோம்.

அத்துடன் அன்றைய நாளில் மக்களுக்காக போக்குவரத்து மற்றும் மதிய உணவு நீர் வசதிகள் ஆகியன ஏற்பாடு செய்துள்ளோம் அதன் பிரகாரம் அம் பாறை மாவட்டத்தில் உள்ள அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ள முடி யும்.

இது மாவீரர்களுக்காக நினைவு கூரப்படுகின்ற நாள் என்பதனால் இங்கு அரசி யல் மேடைப்பேச்சிற்கு இடமில்லை ஆகையினால் அந்நாளில் மிக உணர்வு பூர்வமாக இந்நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம் என கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலுமில்ல பணிக்குழுவின் தலைவர் நாகமணி கிருஸ்ணபிள்ளை தெரிவித்துள்ளாா்.