Breaking News

அரசியல் களத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் விலை தெரியுமா?

நாடாளுமன்றில் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிப்பதற்கு சிறிலங்கா அரச தலைவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்சவிற்கு 48 மணித்தியால காலக்கெடு வழங்கியதை அடுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் களின் விலைகள் சடுதியாக அதிகரித்து வருவதாக ஐக்கியதேசியக் கட்சியினர் பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளனா்.

குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை தொடர்புகொண்டு ஒருவருக்கு தலா 600 மில்லியன்ரூபாவரை தரலாம் என்று விலை பேசப்பட்டுள்ளதாக அக் கட்சியின் முக்கிய நாடாளுமன்ற உறு ப்பினர்களில் ஒருவரான மங்கள சமரவீர தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளாா்.

சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வரானயோசித்த ராஜபக்சவே ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேரம்பேசும் குழுவிற்கு தலைமை வகிப்பதாகவும் மங்கள குறிப்பிட்டிருக்கின்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு மூன்று மில்லியன் அமெரிக்க டொலர் வரை பேரம் பேசப்பட்டுள்ளதாகவும், இந்த பேரம் பேசும் நடவடிக்கைகள் இன்று காலையே இடம்பெற்றதாகவும் மங்கள தனது டுவிட்டர் பதவில் தெரிவித்துள்ளாா்.

மங்கள சமரவீரவின் குற்றச்சாட்டுக்கு மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வர் யோசித்த ராஜபக்ச தனது டுவிட்டர் தளம் ஊடாக பதிலளித்துள்ளார்.

தன்னை அரசியலில் இருந்து ஒதுக்கி வைக்குமாறு மங்களவிடம் கேட்டுக் கொள்வதாக குறிப்பிட்டுள்ள யோசித்த, தான் தற்போது இடம்பெற்றுவரும் ரக்பீ போட்டித் தொடரில் முழுமையாக ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள் ளார்.

எவ்வாறாயினும் சிறிலங்கா நாடாளுமன்றில் அவர்களுக்கு எதிராக இரண்டு தடவைகள் நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தமக்கான பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது தோல்வியை சந்தித்துள்ளபோதிலும், தாமே தொடர்ந்தும் பிரதமர் என்றும், அரசாங்கம் என்றும் மஹிந்த ராஜபக்சவும் அவரது அணியினரும் கூறி வருகின்றனர்.

அதேபோல் ஒக்டோபர் 26 ஆம் திகதி மஹிந்தவை பிரதமராக நியமித்து, அவருக்கு பெரும்பான்மைப் பலத்தை நிரூபிப்பதற்காக தமிழ் தேசியக் கூட் டமைப்பு மற்றும்

ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் மனோ கணேசன் தலைமை யிலான தமிழ்முற்போக்கு முன்னணி, ரவூப் ஹக்கீம் தலைமையிலான சிறி லங்காமுஸ்லீம் காங்கிரஸ், ரிசாட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பேரம்பேசியும் இருந்தார்.

எனினும் அவரது பேரங்களை நிராகரித்த சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும், மஹிந்தவிற்கு ஆதரவு வழங்க முடியாதென திட்டவட்டமாக அறிவித்ததை அடுத்து, மைத்ரி நவம்பர் 9 ஆம் திகதி நள்ளிரவுடன் நாடாளுமன்றத்தையும் கலைத்ததுடன், பொதுத் தேர்தலுக்கும் உத்தர விட்டுள்ளாா்.

இவ் உத்தரவு அடங்கிய மைத்ரியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு சவால் விடுத்து ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், தனி நபர்களு மாக 13 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப் பட்ட நிலையில்

அவற்றை நவம்பர் 12, 13 ஆம்திகதிகளில் ஆய்வு செய்திருந்த தலைமை நீதியரசர் நளீன் பெரெரா தலைமையிலான மூவர்அடங்கிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலதடை உத் தரவைப் பிறப்பித்தது.

அத்துடன் இந்த மனுக்கள் மீதான விசாரணைகள் டிசெம்பர் 4,5,6 ஆம் திக திகளில்இடம்பெறுமென அறிவித்ததுடன், டிசெம்பர் எட்டாம் திகதி வரை இடைக்கால தடையையும் உச்ச நீதிமன்றம் விதித்தது.

இதனையடுத்து 14 ஆம் திகதி புதன்கிழமை சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நாடாளுமன்றம் கூட்டப்பட்ட நிலையில், மஹிந்தவாதிகளின் கடும் எதிர்ப் பிற்கு மத்தியில்ஜே.வி.பி மஹிந்த மற்றும் அவரது அமைச்சரவைக்கு எதிராக முன்வைத்த முதலாவது நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட் டிருந்தது.

எனினும் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிராகரித்திருந்த சிறி லங்கா ஜனாதிபதி மைத்ரிபால மறுநாளான நவம்பர் 15 ஆம் திகதி வியா ழக்கிழமை இரவு ஐக்கிய தேசியக் கட்சி, அதன் கூட்டணிக் கட்சிகள் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் பிரதி நிதிகளை சந்தித்து கலந் துரையாடியுள்ளனா். 

இச் சந்திப்பிற்கு முன்னதாக நாடாளுமன்றம் கூட்டப்பட்டிருந்த நிலையில் அங்கு சபாநாயகரை முற்றுகையிட்ட மஹிந்தவாதிகளுள் அவரை தாக்க முற்பட்டுள்ளனா்.

இதனால் ஆத்திரமடைந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பி னர்கள் சபாநாயகரை பாதுகாக்க முன்வந்ததுடன், மஹிந்தவாதிகளுடன் கைகலப்பிலும் ஈடுபட்டுள்ளனா்.

இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும அவைக்குள் கத்தியொன்றை எடுத்துக் சென்று மஹிந்தவாதிகளை தாக்க முற்பட்டிருந்தார்.

அதேவேளை மஹிந்தவாதிகள் சபாநாயகரின் ஒலி வாங்கியை சேதப்படுத்தி யதுடன், சபாநாயகர் மீது குப்பைக் கூடையாலும் தாக்குதல் நடத்தியிருந் தனர்.

இந்த நிலையில் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் நாடா ளுமன்றம் நவம்பர் 15 ஆம் திகதியான வெள்ளிக்கழமை பிற்பகல் 1.30க்கு கூடு வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் முன்னதாகவே நாடாளுமன்ற அவைக்குள் சென்றிருந்த மஹிந்த வின் சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் மைத்ரி தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரின் ஆசனத்தை பலவந்தமாககைப்பற்றியிருந்ததுடன், சபாநாயகர் அவைக்குள் வருவதைத் தடுக்கும் வகையில் வாயில்களில் காவல் காத்தனர்.

அதேவேளை முதல்நாள் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டும், கத்தியுடன் வந்த பாலித்த தெவரப்பெரும மற்றும் ரஞ்சன் ராமநாயக்க ஆகியஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை கைதுசெய்ய சபாநாயகர பொலிசாருக்குஉத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி பதாதைகளை ஏந்திய வண்ணம் கோசமெழுப்பி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனால் அவை நடவடிக்கைகள் சுமார் ஒரு மணி நேரம் கழித்தே ஆரம்ப மானது. அதுவும் ஏராளமான பொலிசார் மற்றும் நாடாளுமன்ற பாதுகாவ லர்களுடன் நாடாளுமன்றத்திற்குள் வந்த சபாநாயகர் கரு ஜயசூரிய, ஒரு மூளையில் நின்றுகொண்டு நாடாளுமன்றசபைக் கூட்டத்தை நடத்தினார்.

இதன்போதும் மஹிந்தவாதிகள் குறிப்பாக தாமரை மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் மற்றும் சபாநாயகருக்கு பாதூகப்ப வழங்கிய பொலிசார்உட்பட நாடாளுமன்ற பணியாளர்கள் மீது கதிரை மற்றும் அரசியல் சாசனம் உள்ளிட்டசபாநாயகரின் மேசையில் இருந்த புத்தகங்க ளைக் கொண்டு தாக்குதல் நடத்தினர்.



ஒரு கட்டத்தில் மிளகாய் தூள் கலக்கப்பட்ட தண்ணீரைக் கொண்டும் சபாநாயகர் மீது தாக்கினர். இதனால் சபாநாயகருக்கு பாதுகாப்பு வழங்கிய பொலிஸ் அதிகாரிகள் பாதிக்கப்பட்டதுடன், பத்துக்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளனா்.

அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான காமினிஜயவிக்கிரம பெரேரா, மலிக் சமரவிக்கிரம மற்றும் ஜே.வி.பி யின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத்ஆகியோரும் காயமடைந்தனர்.

மஹிந்தவாதிகளின் இந்த வன்முறைகளுக்கு மத்தியிலும் சபாநாயகர் கருஜயசூரிய நாடாளுமன்ற அமர்வுகளை நடத்திய போது, ஜே.வி.பி யின் தலை வர் அநுரகுமார திஸாநாயக்க மஹிந்த மற்றும் அவரது அமைச்சர வைக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானங்களை சமர்ப்பித்தார்.

இதற்கு பெயரைக் குறிப்பிட்டு வாக்கெடுப்பை நடத்த சபாநாயகர் முயற்சித்த போதிலும், மஹிந்தவாதிகள் வன்முறைகளை தீவிரப்படுத்தியதால் குரல் வாக்கெடுப்பை நடத்தி,நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்ட தாக தெரிவித்துள்ளாா்.

அத்துடன் எதிர்வரும் திங்கட்கிழமை பிற்பகல் ஒரு மணி வரை நாடாளு மன்றத்தையும் ஒத்திவைத்தார் சபாநாயகர். இந்த நிலையில் நேற்றைய தினமே சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதிக்குகடிதமொன்றை அனுப்பி வைத்து மஹிந்த மற்றும் அவரது அமைச்சரவைக்கு எதிராக நம்பிக்கை யில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளாா்.

சபாநாயகரின் இந்த அறிவிப்பிற்கு சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால உத்தி யோகபூர்வமாக பதிலை வழங்காத போதிலும், நேற்றைய தினம் சிறிலங்கா பொதுஜன முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து, நம்பி க்கையில்லாப் பிரேரணையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி நிரா கரித்து விட்டாதாக மஹிந்த தரப்பினர் தெரிவித்துள்ளனா்.

அதேவேளை மீண்டும் ஒருமுறை பிரதமராக ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கப் போவதில்லை என்றும் மைத்ரி தங்களிடம் திட்டவட்டமாகக் கூறியதாகவும் மஹிந்த தரப்பு கூறுகின்றது.

எனினும் மஹிந்த தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுன நாடா ளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துவரும் கூற்றுக்களை சிறிலங்கா ஜனாதி பதியோ அவரது ஊடகப் பிரிவோ இதுவரை நிராகரிக்கவில்லை.

இதேவேளை நேற்றைய சந்திப்பின் போதே மஹிந்த மற்றும் அவரது அணியினருக்குஎதிர்வரும் 19 ஆம் திகதி திங்கட்கிழமை நாடாளுமன்றம் கூடும் போது பெரும்பான்மைபலத்தை நிரூப்பதற்கான அனைத்து நடவடி க்கைகளையும் மேற்கொள்ள சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அனுமதித்திருப்பதாக மஹிந்த – மைத்ரி தரப்பினர் மாத்திரமன்றி, ஐக்கிய தேசியக் கட்சியினரும் அறிவித்திருக்கின்றனர்.

இன்றைய தினம் காலையில் தானே நாட்டின் பிரதமர் என்று கூறிவரும் மஹிந்த ராஜபக்ச, பொதுஜன பெரமுன மற்றும் சுதந்திரக் கட்சி ஆகிய ஆளும் கட்சி என்று கூறிக்கொள்ளும்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அவசரமாக அழைத்து கலந்துரையாடியிருக்கின்றார்.

இதன்போது நாடாளுமன்றில் பெரும்பான்மைப் பலத்தை நிரூப்பபதற்கு தேவையானநாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத்துக்கொள்வதற்கு பல திட்டங்கள் வகுக்கப்பட்டதாக பெயரைக் குறிப்பிட விரும்பாத மஹிந்தவாதி  தெரிவித்துள்ளாா்.

இந்த நிலையிலேயே இன்றைய தினம் காலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசைநாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு 600 மில்லியன் ரூபா விலைபேசப்பட்டுள்ளதாகதகவல்கள் வெளியாகியிருக்கி்ன்றன.

இதற்கு முன்னர் ஒக்டோபர் 26 ஆம் திகதி பிரதமராக மஹிந்த நியமிக்கப் பட்டதை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 100 மில்லியன் ரூபா முதல் 300 மில்லியன் ரூபா வரையும், நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தவருக்கு 500மில்லியன் ரூபா வரையும் விலை பேசப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விலை நிர்ணயம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவின் குடும்ப உறுப் பினரான நாடாளுமன்ற உறுப்பினர் ருவான் விஜேவர்தன பகிரங்கப்படுத் தியுள்ளாா்.

இதனையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார தன்னுடன் பேரம் பேசப்பட்டதாக கூறி தொலைபேசி உரையாடலொன்றையும் வெளியிட்டிருந்தார்.

இந்த சதியில் சிறிலங்கா அரச தலைவரானஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தொடர்பு பட்டிருப்பதாகவும் பாலித்த ரங்கே பண்டார குற்றம்சாட்டியிருந்தமை இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.