Breaking News

தமிழரின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு கரு ஜெயசூரிய போன்ற ஒருவா் முன்வரின் வெற்றி.!

ஜனநாயக ரீதியில் செயற்படும் சபாநாயகர் கரு ஜெயசூரிய தரம் குறைந்த வர்களால் அவமதிக்கப்படுவது வேதனையளிப்பதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளாா்.

தமிழர் இனப் பிரச்சனைகளை தீர்ப்ப தற்கு கரு ஜெயசூரிய போன்ற ஒருவர் முன்வந்தால் அது தமிழர்களுக்கு நன் மையாக அமையுமென  வலியுறுத்தி யுள்ளாா். ஸ்ரீலங்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலை தொடர்பாக கிளிநொச்சியில் நேற்றைய தினம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ ஆனந்த சங்கரி இவ்வாறு தெரிவித்துள்ளாா்.