Breaking News

மைத்திரிக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தவுள்ள கட்சித் தலைவர்கள்!

சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடனான இன்றைய காலைச் சந்திப்பை கட்சித் தலைவர்கள் புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக் கப்பட்டுள்ளது.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கை யில்லா தீர்மானத்தினை ஆதரித்த நாடாளுமன்ற கட்சித் தலைவர்களை இன்று காலை சந்திப்பதற்காக ஜனாதி பதி மைத்ரிபால சிறிசேன அழைத்துள்ளாா்.

அதேசமயம், நேற்று நாடாளுமன்ற தீர்மானங்கள் தொடர்பில் விளக்கி சபாநாயகர் அனுப்பிய கடிதத்திற்கு ஜனாதிபதி மைத்ரி நேற்றிரவு கடுமையான பதில் கடிதமொன்றை வழங்கியிருந்தார். இதனையடுத்து நேற்றிரவு கூடிய ஐக்கிய தேசிய முன்னணி பங்காளி கட்சி தலைவர்கள், ஜனாதிபதியுடனான இன்றைய சந்திப்புக்கு செல்வது அர்த்தமற்றதென்பதால் அதனை புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.