பாராளுமன்ற அமர்வு குறித்து சபாநாயகரின் முக்கிய அறிவிப்பு !
ஜனாதிபதி முன்னதாக அறிவித்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரமே இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வுகள் நடைபெற்றுள்ளதாக சபாநாயகர் விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வு குறித்து சபாநாயகர் வெளியிட்டுள்ள ஊடக அறிக் கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதா வது,
ஜனாதிபதி முன்னதாக அறிவித்த வர்த்த மானி அறிவித்தலின் பிரகாரமே இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வுகள் நடை பெற்றது. பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் இன்றைய தினம் ஆரம்பமாகின.
நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்துவதற்கான யோசனையொன்றினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கொண்டு வந்ததாகவும், அந்த யோசனைக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத் துள்ளது.
அத்துடன் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான அநுரகுமார திஸாநாயக்க மற்றும் விஜத்த ஹேரத் ஆகியோர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை முன்வைத்ததாகவும், அந்தப் பிரேரணைக்கு ஆதரவாக பெரும்பான்மை வாக்குகள் கிடைத்ததாகவும் சபாநாயகர் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந் நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல நாளை காலை 10 மணிக்கு பாராளுமன்றத்தை ஒத்திவைக்குமாறு விடுத்த முன்மொழிவினை முன்வைத்ததுடன், அதற்கும் பாராளுமன்றில் பெரும்பான்மை ஆதரவு கிடைத்தாகவும் சபாநாயகர் அறிக்கையில் தெரிவித் துள்ளாா்.