மைத்ரி – மஹிந்தவால் ஆபத்து எச்சரிக்கை - ஐக்கிய தேசியக் கட்சி.!
சிறிலங்காவில் மீண்டும் ஆட்சி அதிகாரத்தைகைப்பற்றுவதற்கு தீவிர முயற்சி யில் ஈடுபட்டுள்ள மஹிந்த ராஜபக்ச அவர் எதிர்பார்ப்பது போல் ஆட்சியை கைப்பற்றினால் தமிழ், முஸ்லீம் மக்களுக்கு பேராபத்து என ஐக்கிய தேசியக் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிறிலங்கா அரச தலைவரான ஜனாதி பதி மைத்ரிபாலசிறிசேனவும், கடந்த ஒக்டோபர் 26 ஆம்திகதி அரசியல் சாச னத்தை மீறி அவரால் புதிய பிரத மராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜ பக்சவும் இணைந்து நடத்திய முதலா வது கூட்டத்திலேயே இதனை நிரூபித்திருப்பதாக ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித் துள்ளாா்.
சிறிலங்காவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டமஹிந்த ராஜபக்சவிற்கு ஆத ரவு திரட்டும் முகமாக நவம்பர் ஐந்தாம் திகதி பத்தரமுல்லையிலுள்ள நாடா ளுமன்ற சுற்றுவட்டத்தில் பொதுக் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டு நடத் தப்பட்டிருந்தது.
குறித்த பொதுக் கூட்டத்தில் நான்கு வருடங்களுக்குப் பின்னர் மைத்ரி – மஹிந்த ஆகியோர் இணைந்து ஒரே மேடையில் தோன்றி, தமது புதிய கூட் டணி தொடர்பில் பெருமிதம் வெளியிட்டிருந்தனர்.
இதன்போது புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ச உரையாற்றிக் கொண்டிருந்த போது கோசமெழும்பி ஆரவாரம் செய்துகொண்டிருந்த அவரது ஆதரவாளர் களால் அசைக்கப்பட்ட சிங்கக் கொடியொன்றின் நிழல் படமொன்றை தனது டுவிட்டர் பதவில் பதிவிட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரான கலாநிதி ஹர்ஷ டி சில்வா, சிறிலங்காவின் தேசியக் கொடியில் தமிழ், முஸ்லீம் மக்களை அடையாளப்படுத்தும் வகையில் இருக்கும் மஞ்சள் மற் றும் பச்சை வர்ணங்கள் குறித்த கொடியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதை காண்பித்துள்ளாா்.