Breaking News

வடக்கு - கிழக்கில் சமஷ்டித் தீர்வு நான் இருக்கும் வரை இல்லை – மைத்திரி

“நான் இக் கதிரையில் இருக்கும் வரை வடக்கு – கிழக்கை இணைக்க விட  மாட்டேன். சமஷ்டியை ஒரு போதும் வழங்கமாட்டேன். இவற்றைச் செய்ய வேண்டுமாயின் என்னைக் கொல்லவேண்டும்” என கடும்தொனியில் கர்ச்சித் துள்ளாா் மைத்திரிபால சிறிசேன.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பா ளர்களுடான சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இத் தகவலை லங்கா தீப இணையத்தளம் பதிவாக்கியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்த போது, அக் கட்சி யின் தேசிய அமைப்பாளரும் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பின ருமான அங்கஜன் இராமநாதன் முன்வரிசையில் இருந்தார் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.