த.தே.கூட்டமைப்பினரை விலை பேச முடியாது - சரத் பொன்சேகா!
நாடாளுமன்றத்தில் தமக்கே பெரும்பான்மை, தமிழ் தேசிய கூட்டமைப்பி னரை யாராலும் பணம் கொடுத்து வாங்க முடியாது. அவர்கள் எங்களுக்கே ஆதரவு வழங்குவாா்கள் என தெரிவித்துள்ளார் இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதியும், ரணில் விக்ரமசிங்கே ஆதரவு எம்.பியுமான சரத் பொன்சேகா. புகழராம் பாடியுள்ளாா்.
இலங்கை பிரதமராக பதவி வகித்து வந்த ரணில் அப் பதவியிலிருந்து நீக்கப் படுவதாகவும், புதிய பிரதமராக ராஜ பக்சே நியமிக்கப்படுவதாகவும் கடந்த 26 ஆம் தேதி அதிரடியாக தெரிவித்தார் அதி பர் மைத்ரி.
ஆனால், ராஜபக்சேவின் நியமனம் இல ங்கையின் அரசியல் யாப்புக்கு எதிரா னது எனவும், நாடாளுமன்றத்தில் தமக்கே பெரும்பான்மை நீடிப்பதாகவும், உடனடியாக பாராளுமன்றத்தினை கூட் டுமாறும் தெரிவித்து வருகிறார் ரணில் விக்ரமசிங்கே.
பாராளுமன்றத்தினை 16 ஆம் தேதி வரை முடக்கி வைப்பதாக முன்னர் தெரி வித்துள்ள மைத்ரி, பல தரப்பிலிருந்தும் தரப்பட்ட அழுத்தத்தின் காரணமாக எதிர்வரும் 7 ஆம் தேதி பாராளுமன்றத்தினை கூட்டவுள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூர்யாவிடம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலை யில், புதிய பிரதமரை நியமிப்பதற்கான அதிகாரம் அதிபருக்கு உள்ளதா என தெரிவித்துள்ளார் சரத் பொன்சேகா.
அரசியலமைப்பை படித்து புரிந்து கொண்டாலே அதிபர் தன்னுடைய அதிகா ரங்களை தெரிந்துகொள்ளலாம். 5 வயது குழந்தைக்கு கூட இது தெரியும். சுமார் 125 உறுப்பினர்களின் ஆதரவு எங்களுக்கு உள்ளது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரை யாராலும் பணம் கொடுத்து வாங்க முடியாது. அவர்கள் எங்களுக்கே ஆதரவு அளிப்பார்கள். வாக்கெடுப்பின் போது எங்களை ஆதரிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமென சரத் பொன்சேகா எதிா்பாா்ப்பதாகத் தெரிவித்துள்ளாா்.