Breaking News

பாராளுமன்றில் பிரதமர் கதிரையில் அமரப்போவது யார்?

எதிர்வரும் 5ஆம் திகதி கூடவுள்ள பாராளுமன்ற அமர்வின் போது, சபையில் பிரதமருக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஆசனத்தை மஹிந்த ராஜபக்ஸவுக்கு வழங் கத் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வர்தமானியில் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவின் பெயர் தெரிவிக்கப்பட் டுள்ளதால் அவருக்கே  ஆசனத்தை வழங்கத் தீர்மானித்துள்ளதாக சபா நாயகர் அலுவலகம் தெரிவித்துள் ளது.

இவ்விடயத்தில் சபாநாயகர் தலை யீடு செய்யப்போவதில்லையெனவும் இவ் விடயம் தொடர்பில் பாராளுமன்ற அதிகாரிகளால் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் சபாநாயகரின் தகவல் மையம் தெரிவித்துள்ளது.