மைத்திரிக்கு கடிதம் - வைரலாகிய விடயத்தில் சபாநாயகர் காரியாலயம் தெரிவிப்பு.!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது கடமையிலிருந்தும் பொறுப்பிலி ருந்தும் தவறியுள்ளார் என்பதை சுட்டிக்காட்டி பிரதம நீதியரசர் நளின் பெரேரா விற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக வெளியான தகவல் உண்மையல்ல என சபாநாயகர் காரியாலயம் தெரிவித் துள்ளது.
இவ்வாறு சமூக வலைத்தளங்களில் பரவிய அக்கடிதத்தில்,
மஹிந்த ராஜ பக்ஷ தலைமையிலான அரசாங்கத் திற்கெதிராக நம்பிக்கையில்லா பிரே ரணை நிறைவேற்றப்பட்டுள்ள நிலை யில் ஜனாதிபதி பாராளுமன்றில் பெரும்பான்மையை பெற்ற புதிய பிரதமரையும் அமைச்சரவையையும் நியமித்திருக்க வேண்டும்.
ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறினே அதற்கான நடவடிக்கையை எடுக் கத் தவறிவிட்டார். அரசியல் யாப்பின் 37.2 ஆவது சரத்தின் படி ஜனாதிபதி தனது பொறுப்பை நிறைவேற்றாத பட்சத்தில் பிரதம நீதியரசரின் துணை யுடன் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மற்றும் பாதுகாப்பு படையின் கட்டுப்பாடு சபாநாயகருக்கு உரித்தாக்கப்படும் என்ற ஏற்பாடு சபாநாயகரின் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும்
குறித்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியின் இயலாமை தொடர்பாக பெரும் பான்மை கருத்தை அறியுமாறும் பிரதம நீதியரசரிடம் கோரப்பட்டுள்ளதாக வும் குறித்த கடிதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
ஆனால் குறித்த கடிதம் தொடர்பாக சபாநாயகர் காரியாலயம் விடுத்துள்ள மறுப்புச் செய்தியில்,
அவ்வாறானதொரு கடிதம் அவசியமில்லை, நம்பிக்கை யில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டால் சபாநாயகரே ஒரே அதிகாரம் மிக்க வர் என அரசியலமைப்பில் மிகத் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச் செய்தி எங்கிருந்து? யார்? அனுப்பியது தொடர்பாக எந்த விடயமும் எங் களுக்குத் தெரியாது. ஆனால் சமூக வலைத்தளங்களில் சபாநாயகர் பிரதம நீதியரசருக்கு கடிதம் எழுதியதாக வைரலாக பரவியுள்ளதாக அறிய கிடைத் துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.