Breaking News

"தனி நாட்டு கோரிக்கைக்காகவே ரணிலுக்கு ஆதரவு"- மொஹான் சமரநாயக்க.!

நாட்டின் தேசிய பிரச்சினைகள் தொடர் பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் குரல் எழுப்பவில்லை. தமிழர்களுக்கான தனி நாடு வழங்கப்பட வேண்டும் என் பதே அவர்களது நிலைப்பாடாகவுள்ளதா கத் தெரிவித்துள்ள மஹிந்த ராஜபக்ஷ வின் முன்னாள் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க, ரணில் விக்கிரமசிங்க அவர்களது கோரிக்கைக்கு சாதகமாக செயற்படுவார் என்பதாலேயே கூட்டமைப்பினர் தற்போது அவருக்கு ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்துள்ளாா்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலை குறித்து கருத்து வெளியிடும் வகை யில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற் கண்டவாறு தெரிவித்துள்ளாா். 

 மேலும் குறிப்பிடுகையில்,

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் வழங்கிய வாக்குறுதி களைப் புறந்தள்ளி இராணுவத்தினரைக் காட்டிக்கொடுக்கும் செயற்பாடு, நாட் டைப் பிளவுபடுத்தும் அரசியலமைப்பு, சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள், நாட் டின் தேசிய வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்தல் போன்ற நட வடிக்கைகளை முன்னெடுத்தமையினாலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க மீது அதிருப்தியடைந்து, மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்துள் ளாா் எனத் தெரிவித்துள்ளாா்.