Breaking News

தோட்டத்தொழிலாளர் சம்பளத் தீர்வாக வாழ்க்கைப்படி வழங்க வேண்டும் - சிவசக்தி.!

கூட்டு ஒப்பந்தம் மூலமே தீர்வு காணப்பட வேண்டுமென  தோட்டத் தொழிலா ளர்களின் சம்பள விவகாரத்தினை அரசாங்கம் தட்டிக்கழித்து விட முடியா தென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் வன்னி தேர்தல்கள் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் வலி யுறுத்தியுள்ளார். 

உடனடி தீர்வை வழங்கும் முகமாக அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ள வாழ் க்கைப்படியினை அவர்களுக்கு மீண் டும் வழங்க வேண்டுமெனக் கோரி க்கை விடுத்துள்ளார்.

ஊடக அறிக்கையில் மேலும் தெரி விக்கையில்.....,

ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் வழங்க வேண்டுமெனக்கோரி தோட்டத் தொழிலாளர்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனா்.

அதற்கு ஆதரவாக நாடாளவிய ரீதியில் பல்வேறு போராட்டங்கள் முன்னெ டுக்கப்படுகின்றன. குறிப்பாக தலைநகரத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அணிதிரண்டு வலியுறுத்தல்களையும் செய்துள்ளார்கள்.

இவ்வாறான அழுத்தமளிக்கும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக அரசியல் சாய மின்றி இடம்பெற வேண்டும் என்பதோடு அதற்கான எமது பூரண ஆதரவையும் வழங்குவதற்கு தயராகவே உள்ளோம். 1992ஆம் ஆண்டு அரச தோட்டங்கள் 22தனியார் கம்பனிகளுக்கு 99வருட குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வாழ் க்கைப் படியும் நிறுத்தப்பட்டது. அதனையடுத்த காலங்களில் கூட்டு ஒப்பந்த விவகாரம் ஆண்டு தோறும் நடைபெறும் ஒருவிழா போன்றாகிவிட்டது.

சம்பந்தப்பட்ட தரப்புக்கள் இழுபறிக்கு உள்ளாவதும் ஈற்றில் குறைந்த தொகை அதிகரிப்புடன் இணக்கப்பாட்டிற்கு வருவதும் தான் வாடிக்கையாக உள்ளது. உண்மையில் கூட்டு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதன் காரணமாக அரசதுறை சம்பள பட்டியலுக்குள்ளோ அல்லது தனியார் துறை சம்பள பட்டியலுக் குள்ளோ தோட்டத் தொழிலாளர்கள் உள்வாங்கப்படாது தொடர்ச்சியாக புறக் கணிக்கப்பட்டுள்ளனா்.

அரசாங்கமே தம்மிடமிருந்து தோட்டங்களை தனியார் துறைக்கு வழங்கியுள் ளது. மேற்படி தனியார் துறையினால் அரசாங்கம் இதர நன்மைகளைப் பெறு கின்றது என்பதற்காக நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் வளர்ச்சி கண்டு ஏற்றுமதியில் அதிகளவு வருமானத்தினை ஈட்டித்தருவதற்கு காரணமாக உள்ள பாட்டாளி வர்க்கத்தின் கோரிக்கைகளை நிராகரித்து விட முடியாது.

எனவே முதலாளிமார் சம்மேளம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தொழிற்சங்களை உடனடியாக ஒருமேசைக்கு கொண்டு வந்து தற்போதைய பொருளாதார நிலைமைகளைக் கருத்திற்கொண்டு அந்தப் பட்டாளி வர்க்கத்தின் நீண்டகால கோரிக்கையை தீர்ப்பதற்காக கொள்கை ரீதியான முடிவொன்றை எட்ட வேண்டும்.

இப் பேச்சுக்கள் நிறைவடைவதற்கான காலம் வரையில் உடனடித் தீர்வாக அப் பட்டாளி வர்க்கத்திற்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த வாழ்க்கைப்படியை அரசங்கம் மீளவும் வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அரசியல் பிரதி நிதிகளை தமது கைக்குள் வைத்துக்கொண்டு அரசாங்கம் இவ் விடயத்தினை தட்டிக்கழிக்க முனையக் கூடாதெனத் தெரிவித்துள்ளாா்.