பின்னாலிருந்து தாக்கும் பழக்கமில்லையென்கிறாா் - சரத்பொன்சேகா
ஜனாதிபதி கொலை சதி குறித்து பொலிஸாரிற்கு தகவல் வழங்கிய நாமல் குமார மனோநிலை பாதிக்கப்பட்டவர் என தெரிவித்துள்ள முன்னாள் இராணு வத் தளபதியும் அமைச்சருமான சரத்பொன்சேகா அவரிற்கு சிகிச்சை வழங்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை கொலை செய்யும் சதி முயற்சியில் முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான சரத்பொன்சேகா விற்கு தொடர்பிருப்பதாக நாமல் குமார தெரிவித்துள்ளார்.
கொலை சதி முயற்சி குறித்த விபரங்களை முதன்முதலில் அம்பலப்படுத்திய நாமல் குமாரவே இதனை தெரிவித்துள்ளார். கொலைச் சதி குறித்து தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா சரத்பொன்சேகாவின் நெருங்கிய நண்பர் என நாமல் குமார தெரிவித்துள்ளார்.
சதி முயற்சியின் பின்னணியில் இருப்பவர் சரத்பொன்சேகா என்பது எனக்கு தெரியுமென நாமல் குமார தெரிவித்துள்ளார். சிஐடியினருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் நான் சரத்பொன்சேகா குறித்து தெரிவித்துள்ளதாக நாமல் குமார தெரிவித்துள்ளார்.
இந் நிலையிலேயே நாமல் குமார மனோ நிலை பாதிக்கப்பட்டவர் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பணியா ளரான நாமல் குமாரவிற்கு மனநல பாதிப்பிற்கான சிசிச்சை அவசியமெனத் தெரிவித்துள்ளாா்.
முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவை ஒரு தடவையே நான் சந்தித்துள்ளேன் அவர் பிரதிபொலிஸ்மா அதிபராக பதவியேற்ற பின் னரே இச் சந்திப்பு நடைபெற்றதாகத் தெரிவித்துள்ளார்.
முதல் தடவையாக சந்திக்கும் நபர் ஒருவருடன் இணைந்து எவரும் ஜனாதி பதியை கொலை செய்ய முயல்வதில்லையெனவும் சரத்பொன்சேகா தெரி வித்துள்ளதுடன் நான் எந்த நடவடிக்கையிலும் கண்ணிற்கு புலப்படாத விதத் தில் செயற்படுவதில்லை எனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
எனக்கு பின்னாலிருந்து தாக்கும் பழக்கமில்லை நான் வெளிப்படையாக செயற்படுபவன் முன்னாள் நின்று தலைமை வகிப்பவன் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபரிற்கு பின்னால் மறைந்திருக்க வேண்டிய தேவையில்லை எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.