Breaking News

காதலியை கொலை செய்து எரிப்பு ; காதலனுக்கு மரண தண்டனை - இளஞ்செழியன் தீர்ப்பு.!

திருகோணமலை பன்குளம் பாடசாலை மாணவி அவரது காதலனால் ஏமாற் றப்பட்டு கொலை செய்து எரிக்கப்பட்ட வழக்கில் கொலை செய்யப்பட்ட மாண வியின் காதலனுக்கு மரண தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதி மன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார். 

கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் திகதி திருகோணமலை பன் குளம் பாடசாலை மாணவியான டில்ஷானி காணாமல்போன நிலை யில் அவரது உடல் எச்சங்கள் எரிக்கப் பட்ட நிலையில் காட்டுப் பகுதியில் நீர் குட்டையொன்றில் இருந்து மீட்கப் பட்டுள்ளது.

இதனையடுத்து இதில் கொலைசெய்யப்பட்ட மாணவியான டில்ஷானியின் காதலன் நிஷாந் ஜயாத் முதலாம் சந்தேகநபராகவும் மற்றும் அவரது நண்பர் இசுருறு சம்பத் சில்வா இரண்டாவது சந்தேக நபராகவும் கைது செய்யப்பட் டாா்.

இவர்கள் எதிரான வழக்கு விசாரணையானது திருகோணமலை மேல் நீதி மன்றில் நடைபெற்ற நிலையில் இன்றைய தினம் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

இவ் வழக்கில் இரண்டாம் எதிரி குறித்த கொலை சம்பவத்துடன் நேரடியாக தொடர்புபட்டதாகவோ அல்லது பொது எண்ணத்துடன் கொலை புரிந்தாகவோ அல்லது அதற்கு உடந்தையாக இருந்ததாகவோ வழக்குத் தொடுநர் தரப்பா னது நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் எண்பிக்க தவறிய குறிப்பிட்ட மன்று இரண்டாம் எதிரியை விடுதலை செய்துள்ளனா்.

மேலும் கொல்லப்பட்ட மூன்று மாத கர்ப்பினியான அம் மாணவியின் காதலா னான முதலாம் எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் சாட்சியங்கள் சான்றுக ளின் அடிப்படையில் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் வழக்கு தொடு நர் எண்பித்துள்ளதாக குறிப்பிட்டு குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து திரு கோணமலை மேல். நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பு வழங்கியுள்ளாா்.