அரசியல் கைதிகளை விடுவிக்காது சர்வதேசத்திடம் இராணுவத்துக்கு பொதுமன்னிப்பு கோருவது நீதியா?
உள்நாட்டில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க தயாரில் லாத ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உலக நாடுகளிடம் இருந்து இலங்கை இராணுவத்துக்கு பொதுமன்னிப்பு கோரியிருப்பது இயற்கை நீதிக்கு புறம்பான விடயமாகுமென ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளாா்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன் னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகிய மூவருமே சிங்கள மக்களின் வாக்குகளை இலக்கு வைத்தே அர சியலை நடாத்துகின்றனா் என்பது வெளிப்படையான உண்மையெனத் தெரிவித்துள்ளாா்.
ஏறாவூர் இளைஞர் கழக சம்மேளனத்தை சேர்ந்த இளையோர்களை இவரின் ஏறாவூர் இல்லத்தில் இன்று திங்கட்கிழமை காலை சந்தித்து பேசியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் சபையில் ஆற்றிய உரை யின் சுருக்கம் என்னவென்றால் இலங்கை இராணுவத்துக்கு உலக நாடுகள் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்பதே ஆகும். அவ்வாறு கோருவதற் கான அவரின் தார்மீக உரிமையை நாம் தவறாக பார்க்கவில்லை.
ஆனால் உள்நாட்டில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க தயாரில்லாத அவர் உலக நாடுகளிடம் இருந்து ஸ்ரீலங்கா இராணுவத்துக்கு பொதுமன்னிப்பு கோரியிருப்பது இயற்கை நீதிக்கு புறம்பான விடயமாகும்.
உள்நாட்டில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குகின்ற அதி காரம் அவரிடம் உள்ளபோதும் அவர் அதை செய்யாமல் ஸ்ரீலங்கா இராணு வத்துக்கு பொது மன்னிப்பு வழங்குங்கள் என்று சிங்கள மக்களின் வாக்கு களை பெறுவதற்காக ஐக்கிய நாடுகள் சபையில் கோரியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவாக இருந்தாலும் சரி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவாக இருந்தாலும் சரி, ஏன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவாக இருந்தாலும் சரி சிங்கள மக்களின் வாக்குகளை இலக்கு வைத்தே அரசியலை செய்கின்றார்கள் என்பது வெளிப்படையான உண்மையாக உள் ளது.
அதே நேரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரம சிங்க ஆகியோர் தமிழ் பேசும் மக்களுக்கு எதையும் கொடுக்க தேவை இல்லை என்கிற நிலைப்பாட்டில் காணப்படுகின்றனர்.
ஏனென்றால் அவர்களிடம் தேர்தல் காலங்களில் தமிழ் பேசும் அரசியல் தலை மைகள் பூரண சரணாகதி அடைந்து விடுகின்ற வழக்கத்தை கொண்டிருக்கின் றன என்கிற யதார்த்தத்தை முற்றிலும் உணர்ந்துள்ளனா்.
முஸ்லிம் அரசியல் தலைமைகள் குறித்து பேசவே தேவை இல்லை. மிக நீண்ட காலமாக அரசியல் கைதிகளாக சிறைச்சாலைகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் இளையோர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க தயார் இல்லாத சிங்கள பௌத்த பேரினவாத பெருந்தேசிய அரசாங்கம் இன பிரச்சினைக்கான தீர்வை எங்ஙனம் வழங்கும்?
இன பிரச்சினைக்கான தீர்வு எட்ட போவதும் இல்லை, அரசியல் அமைப்பு மாற்றம் அதுவாக கிட்டப் போவதும் இல்லை. ஆனால் ஜனாதிபதி தேர்தலில் தீர்மானிக்கின்ற சக்தியாக தமிழ் பேசும் மக்களே உள்ளார்கள்.
மலையக தமிழர்கள் அடங்கலாக தமிழ் பேசும் மக்களின் ஆதரவை பெற்றால் அன்றி 50.1 சதவீத வாக்கை எந்த சிங்கள தலைவரும் தனித்து பெற்று வெற்றி அடைய முடியாது. வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த தமிழர்கள் வாக் களிப்பை புறக்கணித்து ஜனாதிபதி தேர்தலின் முடிவை மாற்றிய சரித்திரம் உள்ளது.
அதேபோல தமிழ் பேசும் மக்களின் வாக்குகள் காரணமாக ஜனாதிபதி மாற் றப்பட்ட வரலாறும் கண் முன் நடந்தேறி உள்ளது. எனவே தமிழ் பேசும் மக்கள் எடுப்பார் கை பாவைகளாக இருக்காமல் நிதானமாக சிந்தித்து செயற்பட்டு ஒன்றித்து வாக்களித்து இந்நாட்டின் ஜனாதிபதியை தீர்மானிக்கின்ற போது தவிர்க்க முடியாத அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டு விடும்.
அப்போது அரசியலமைப்பை மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் நேரும். இவ்விதம் சிங்கள பௌத்த பெரும்பான்மை பேரினவாத பெருந்தேசிய தலைமையை அரசியல் அமைப்பு மாற்றத்துக்கு நிர்ப்பந்திப்பதன் மூலமே எதிர்காலத்தில் தமிழ் பேசும் மக்களின் இருப்பு, உரிமை, பாதுகாப்பு ஆகியவற்றை பாதுகாத்து இந்நாட்டில் சம பிரஜைகளாக கௌரவத்துடன் வாழ முடியும்.
இளையோர்கள் இந்நாட்டின் எதிர்கால தலைவர்கள் ஆவர். இவர்களுக்கு சமு தாயம் குறித்த பிரக்ஞையும், பொது நல அக்கறையும் அத்தியாவசியமாக உள் ளன. சமுதாயத்தை இளைஞர்கள் படிக்க வேண்டி உள்ளது. சமுதாயத்தில் ஏற் படுகின்ற மாற்றங்களை படிக்க வேண்டி உள்ளது.
இன்று போதை பொருள் பாவனை சமுதாயத்தை ஊடறுத்து நிற்கின்றது. போதை பொருள் அற்ற சமுதாயத்தை உருவாக்க இளைஞர்கள் முன்னின்று உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளாா்.